அடுத்தடுத்து தள்ளி வைக்கப்பட்ட படங்கள் | யோகிபாபு எப்படிப்பட்டவர் தெரியுமா? : சாரா இயக்குனர் பரபர குற்றச்சாட்டு | தியேட்டரில் திரையிட தயங்கியதால் 'சாவு வீடு' டைட்டில் மாற்றம் | ரவிக்கை அணியாமல், சுருட்டு புகைத்து நடித்தது தொழில் நேர்மை: கீதா கைலாசம் | ஜெயிலர் 2வில் ஷாருக்கான் நடிக்கிறாரா? : ஆயிரம் கோடி வசூலை படம் அள்ளுமா? | காந்தாரா கிண்டல்: மன்னிப்பு கேட்ட ரன்வீர் சிங் | வேள்பாரிக்கு தீவிரம் காட்டும் ஷங்கர் : ஹீரோ யார்? | வதந்திகள் நல்ல விளம்பரம்: கிரிக்கெட் வீரருடன் நெருக்கம் பற்றி மிருணாள் தாக்கூர் | இந்தவாரம் 6 படங்கள் ரிலீஸ் : 2025 தமிழ்ப் படங்களின் எண்ணிக்கை 300ஐ நெருங்குமா? | பிளாஷ்பேக்: முதல்வர் ஸ்டாலினுடன் நடித்த பாக்யஸ்ரீ |

பொன்னியின் செல்வன், லியோ படங்களுக்கு பிறகு தமிழில் தற்போது விடாமுயற்சி, தக்லைப் படங்களிலும், மலையாளத்தில் ராம், ஐடெண்டிட்டி படங்களிலும், தெலுங்கில் விஸ்வம்பரா போன்ற படங்களில் பிசியாக நடித்து வருகிறார் த்ரிஷா. இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிரஞ்சீவிக்கு ஜோடியாக மீண்டும் த்ரிஷா நடிக்கும் விஸ்வம்பரா படத்தில் அவர் இரண்டு வேடத்தில் நடிப்பதாக ஒரு தகவல் வெளியாகி இருக்கிறது.
இந்த படம் த்ரிஷா நடிக்கும் கதாபாத்திரத்தை மையமாகக் கொண்டே நகருவதாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே தமிழில் தான் கதையின் நாயகியாக நடித்த மோகினி என்ற படத்தில் இரண்டு வேடத்தில் நடித்திருந்த த்ரிஷா தற்போது சிரஞ்சீவி படத்தின் மூலம் மீண்டும் இரண்டு வேடங்களில் நடிக்க போகிறார்.