இளம் நடிகருடன் காதலா? - கோட் நடிகை விளக்கம் | ஏஆர் ரஹ்மான் பிரிவுக்கும், மோகினி டே பிரிவுக்கும் சம்பந்தம் இல்லை: சாய்ரா பானு வழக்கறிஞர் விளக்கம் | என் மகளை மீட்டு தந்தது செட்டிக்குளங்கரா தேவி தான் : நயன்தாரா அம்மா உருக்கம் | மலையாள வாரிசு வில்லன் நடிகர் மேகநாதன் மறைவு | கிஸ் படத்திலிருந்து அனிரூத் விலகலா? | சம்பந்தி இது சரியில்லை : ‛ராஜாகிளி' பட விழாவில் அர்ஜூன் கலாட்டா | ராம் பொதினேனிக்கு ஜோடியான பாக்யஸ்ரீ போர்ஸ் | சிவகார்த்திகேயனுக்கு வில்லனா? மறுப்பு தெரிவித்த விஷால் | ஹாலிவுட் மியூசிக் மீடியா விருது: ஆடுஜீவிதம் பின்னணி இசைக்காக வென்றார் ஏ.ஆர்.ரஹ்மான் | விஜய் 69வது படத்தில் இணையும் வரலட்சுமி |
நூற்றுக்கணக்கான படங்களில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவரும், இயக்குனருமான சூரிய கிரண், 48 உடல்நலக்குறைவால் சென்னையில் காலமானார். 1980களில் குழந்தை நட்சத்திரமாக தென்னிந்திய மொழிகளில் 200 படங்களில் நடித்தவர் மாஸ்டர் சுரேஷ். குறிப்பாக ‛மௌன கீதங்கள், கல்லுக்குள் ஈரம், கடல் மீன்கள், படிக்காதவன்' ஆகியவை தமிழில் அவர் நடித்த முக்கியமான படங்கள் ஆகும்.
பின்னர் தனது பெயரை சூரிய கிரண் என மாற்றி தெலுங்கில் சத்யம், பிரமாஸ்திரம் போன்ற படங்களை இயக்கினார். தெலுங்கு பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் பங்கேற்றார். தமிழில் வரலட்சுமி நடிப்பில் 'அரசி' என்ற படத்தை இயக்கி உள்ளார். இன்னும் இந்தப்படம் திரைக்கு வரவில்லை.
இவருக்கு மஞ்சள் காமாலை பாதிப்பு அதிகமாக இருந்ததாக கூறப்படுகிறது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற நிலையில் இன்று(மார்ச் 11) காலை 11 மணிக்கு அவரது உயிர் பிரிந்தது. நாளை இறுதிச்சடங்கு நடக்கிறது. இவர் நடிகை சுஜிதாவின் சகோதரர் ஆவார். குழந்தை நட்சத்திரமாக இரண்டு மத்திய அரசு விருதும், இயக்குனராக இரண்டு மாநில விருதும் (நந்தி அவார்டு) பெற்றுள்ளார் சூரிய கிரண்.
நடிகை காவேரியை திருமணம் செய்த சூரிய கிரண் அவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் பிரிந்துவிட்டார்.