டிச., 27ல் மலேசியாவில் ‛ஜனநாயகன்' இசை வெளியீடு | டிசம்பர் 12ல் ரஜினி பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் அண்ணாமலை | ராஜமவுலிக்கு ஆதரவாக குரல் கொடுத்த ராம் கோபால் வர்மா | பிரபல எழுத்தாளர் உடன் கைகோர்க்கும் சந்தானம் | அஞ்சான் படத்தின் நீளத்தை குறைத்த லிங்குசாமி | 26 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸ் ஆகும் அமர்க்களம் | மீண்டும் கன்னட சினிமாவிற்கு திரும்பிய பிரியங்கா மோகன் | வரி ஏய்ப்பு : நாகார்ஜுனா, வெங்கடேஷ் குடும்ப ஸ்டுடியோக்களுக்கு நோட்டீஸ் | ஜனநாயகன் - தெலுங்கு வியாபாரம் முடிவு | தெலுங்கில் ரீரிலீசாகும் 'பையா' : மீண்டும் பார்க்க கார்த்தி ஆர்வம் |

நடிகை வரலட்சுமிக்கும், மும்பையைச் சேர்ந்த தொழிலதிபர் லிக்கோலாய் சச்தேவ் என்பவருக்கும் சமீபத்தில் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதையடுத்து வரலட்சுமி திருமணம் செய்யும் தொழில் அதிபருக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது என்றும், 15 வயதில் ஒரு மகள் இருப்பதாகவும் தகவல் வெளியாகின. இது சோசியல் மீடியாவில் விமர்சிக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் வரலட்சுமி மகளிர் தினத்தில் தனது இன்ஸ்டாகிராமில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில், ‛‛மற்றவர்கள் என்னை பற்றி விமர்சிப்பது குறித்து நான் ஒருபோதும் கவலைப்பட்டதில்லை. பெண்கள் எப்போதுமே மற்றவர்களை பற்றி கவலைப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். உங்களுக்காக நீங்கள் வாழுங்கள். இதை செய்யாதே அதைச் செய்யாதே என்று சொல்பவர்கள் யாரும் நம்முடைய வாழ்க்கை முழுவதும் பயணிக்க போவதில்லை. நீங்கள் மட்டும் தான் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு துணையாக நிற்கப் போகிறீர்கள்'' என தெரிவித்துள்ளார் வரலட்சுமி.




