சிம்புவிற்கு பதிலாக சிவகார்த்திகேயன் தி கோட் படத்தில் நடந்த மாற்றம்! | லெஜண்ட் சரவணன் படத்தில் இணைந்த பிரபலங்கள்! | காதலரை கரம்பிடித்த மேகா ஆகாஷ்: சென்னையில் எளிய முறையில் நடந்த திருமணம் | மக்களின் ஆதரவு உற்சாகப்படுத்துது...!: சந்தோஷத்தில் சஞ்சனா | போதை மறுவாழ்வு மையத்தில் ஸ்ரீகுமார் அட்வைஸ்! | பெண் குழந்தைக்கு தாயான ரித்திகா! | சீரியலிலிருந்து விலகியது ஏன்? சாய் காயத்ரி விளக்கம் | மதிக்காத நடிகையை வெறுக்கும் இயக்குனர்கள் | புது சீரியலில் கமிட்டான தர்ஷனா! | சுயமரியாதை முக்கியம்! வீஜே மணிமேகலை அதிரடி |
90களில் தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோயினாக வலம் வந்தவர் நடிகை சிம்ரன். பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்த இவர் தற்போது குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். கடைசியாக அவர் விக்ரம் நடித்த ‛மஹான்', ஆர்யா நடித்த ‛கேப்டன்' ஆகிய படங்களில் நடித்து இருந்தார். அவர் நடித்த அந்தகன் மற்றும் துருவ நட்சத்திரம் படங்கள் இன்னும் ரிலீசாகவில்லை.
சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருந்து வரும் சிம்ரனிடம் ரசிகர் ஒருவர், ‛நீங்கள் நடிக்க விரும்பிய திரைப்படம் மற்றும் கதாபாத்திரம் என்ன?' என எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு சிம்ரன், ‛பொன்னியின் செல்வனில் நந்தினி கதாபாத்திரத்தில் நடிக்க விரும்பியதாக' கூறினார்.
மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வனில் நந்தினியாக ஐஸ்வர்யா ராய் நடித்தது குறிப்பிடத்தக்கது.