விட்டுக் கொடுத்த விக்ரம் : வெளியாகும் 'வீர தீர சூரன் 2' | எம்புரானை தெலுங்கில் ரீமேக் செய்ய முடியாது : மோகன்லால் ஓபன் டாக் | கார் விபத்தில் சிக்கி நடிகர் சோனு சூட் மனைவி காயம் | இசையமைப்பாளர் ஷான் ரகுமான் மீது பண மோசடி வழக்கு | டேவிட் வார்னர் பற்றி அலட்சியமாக பேசவில்லை : வருத்தம் தெரிவித்த நடிகர் ராஜேந்திர பிரசாத் | யாருப்பா அந்த வில்லன் | ஓடிடி-யில் வெளியாகும் ராயன் பிரதர் படம் | அட்லி படம் : சல்மான்கான் கொடுத்த அப்டேட் | நாகார்ஜுனாவைப் புகழ்ந்த மலையாள நடிகர் சவுபின் ஷாகிர் | வீர தீர சூரன் - கடைசி நேரத்தில் வழக்கு போடுவது சரியா ? |
நடிகை நயன்தாராவை பொறுத்தவரை திரையுலகில் நுழைந்து கடந்த 20 வருடங்களாக லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அடைமொழியுடன் முன்னணி நடிகையாகவே வலம் வருகிறார். அதேபோல மலையாள நடிகை மஞ்சு வாரியர் நயன்தாராவுக்கு முன் சீனியராக அறிமுகமானவர். அதன்பிறகு சிறிய இடைவெளி விட்டு மீண்டும் தனது இரண்டாவது இன்னிங்ஸில் கடந்த பத்து வருடங்களுக்கு மேலாக முன்னணி நடிகையாக நடித்து வருபவர். சமீப காலமாக தமிழ் திரை உலகில் நுழைந்து ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். கேரளாவை பொறுத்தவரை இவரையும் லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைப்பவர்கள் உண்டு.
இந்த இருவரும் இதுவரை ஒரு படத்தில் கூட இணைந்து நடித்ததில்லை. மேலும் எந்த ஒரு நிகழ்விலும் கலந்து கொண்டு ஒன்றாக இருந்தது போன்று புகைப்படம் வெளியானதும் இல்லை. இந்த நிலையில் உலக மகளிர் தினத்தைக் கொண்டாடும் விதமாக இவர்கள் இருவரும் சமீபத்தில் ஒன்றாக சந்தித்துள்ளனர். பொது நிகழ்விலோ படப்பிடிப்பிலோ அல்லாமல் அவர்களது வீட்டிலேயே இயல்பான தோற்றத்தில் இவர்களது சந்திப்பு நிகழ்ந்துள்ளது என்பதை மஞ்சு வாரியர் வெளியிட்டுள்ள புகைப்படம் உறுதிப்படுத்துகிறது.
மேலும் நயன்தாரா பற்றி மஞ்சு வாரியர் கூறும்போது, “நாம் அனைவருமே நமக்குள் ஒரு அற்புதமான பெண்ணை வைத்திருக்கிறோம்.. நான் இதோ என் பக்கத்திலும் ஒருவரை வைத்து இருக்கிறேன். லவ் யூ மை சூப்பர் ஸ்டார் நயன்தாரா” என்று குறிப்பிட்டுள்ளார்.