நானி உடன் மோத தயாராகும் மோகன் பாபு! | சம்யுக்தா கைவசம் இத்தனை படங்களா? | மகாநதி சீரியலில் நடிக்க பயந்த ஷாதிகா! | அமீர்கான் மகன், சாய் பல்லவி படத்தின் புதிய தலைப்பு மற்றும் ரிலீஸ் தேதி இதோ! | அரசு ஆணையை நிறைவேற்றிய கர்நாடகா தியேட்டர்கள் | கென் கருணாஸ் படத்தின் புதிய தகவல் இதோ! | ஹிந்தியில் ரீமேக் ஆகும் அருந்ததி கதையின் நாயகி யார் தெரியுமா? | அதிக சலுகைகள் பெறும் நடிகர்கள்: ஆமிர்கான் காட்டம் | 'மிராய்' பட்ஜெட் 60 கோடிதானா? | சவுபின் சாஹிர் வெளிநாடு செல்ல தடையை நீக்க உயர்நீதிமன்றம் மறுப்பு |
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஜய், ‛தமிழக வெற்றிக் கழகம்' என்ற அரசியல் கட்சியை துவங்கி உள்ளார். 2026 சட்டசபை தேர்தலில் களமிறங்க உள்ளதாகவும் அறிவித்துள்ளார். தற்போது தான் நடித்து வரும் ‛தி கோட்' படம், அதற்கடுத்து ஒரு படத்துடன் சினிமாவை விட்டு விலகி முழு நேர அரசியலில் இறங்க போவதாகவும் தெரிவித்துள்ளார்.
தற்போது அந்த கட்சியில் உறுப்பினர் சேர்க்கும் பணி நடக்கிறது. இதற்காக புதிய செயலி ஒன்றை நடிகர் விஜய் அறிமுகம் செய்துள்ளார். அதை அறிமுகம் செய்து வைத்து பேசிய நடிகர் விஜய், ‛‛பிறப்போக்கும் எல்லா உயிர்க்கும்... என்ற அடிப்படை சமத்துவ கொள்கையை பின்பற்றி வரவிருக்கும் சட்டபை தேர்தலை நோக்கி பயணிக்கிறோம். நீங்கள் விருப்பப்பட்டால் இதில் உறுப்பினராக சேரலாம். ரொம்ப எளிமையான வழி தான்'' என்று தெரிவித்துள்ளார்.