இந்த முட்டாள் யார் : ஸ்ரேயா கோபம் | பெண் குழந்தைக்கு அப்பாவான பிரேம்ஜி அமரன் | டிச., 8ல் துவங்கும் சூர்யா 47 பட படப்பிடிப்பு | தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் கடும் போட்டி | ஏகனுக்கு ஜோடியாக இரண்டு நாயகிகள் | நலமாக இருந்தால்தான் நல்லதைத் தர முடியும்: தீபிகா படுகோனே | ஒரு வாரம் தள்ளிப்போகும் ‛வா வாத்தியார்' | தனுஷ், அவரது மேலாளர் பற்றிய சர்ச்சை : முற்றுப்புள்ளி வைத்த மான்யா ஆனந்த் | 9 படங்களில் நடிக்கும் நயன்தாரா : இந்தியாவிலே இவர்தான் டாப் | ரீ ரிலீஸ் படங்கள் முடிவுக்கு வருகிறதா? |

சென்னையில் ரஜினிகாந்தை கவுரவிக்கும் வகையில் ரஜினி திரைப்பட விழா நடக்கிறது. 'ரஜினிசியன்' என்ற பெயரில் நடக்கும் இந்த விழாவை பிவிஆர் மற்றும் ஐநாக்ஸ் நிறுவனங்கள் நடத்துகின்றன. இந்த விழாவில் காலா, பாபா, 2.ஓ, சிவாஜி, முத்து, தர்பார் படங்கள் திரையிடப்படுகிறது. சென்னையில் உள்ள சத்யம், எஸ்கேப், பிவிஆர், பிளாசோ, லக்ஸ் ஆகிய தியேட்டர்களில் இந்த படங்கள் திரையிடப்படுகிறது.
இந்த படங்களை பார்க்க ஆன்லைனில் முன்பதிவு செய்யலாம், கட்டணத்திலும் சலுகை வழங்கப்படுகிறது. முன்னர் வெளிவந்த சூப்பர் ஹிட் படங்களை மீண்டும் திரையிடுவது தற்போது ஒரு டிரண்டாகி உள்ளது. அந்த வரிசையில் ரஜினி படங்களை மொத்தமாக மீண்டும் திரைக்கு கொண்டு வரும் முயற்சி. இதற்கு நல்ல வரவேற்பு கிடைக்கும் பட்சத்தில் ரஜினி நடித்த வெள்ளி விழா படங்களான மூன்று முகம், முரட்டுக்காளை, முள்ளும் மலரும் மாதிரியான படங்களையும் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.