குட் பேட் அக்லி டிரைலர் வெளியானது : நிச்சயம் அஜித் ரசிகர்களுக்கு கொண்டாட்டமே...! | ஆக.,14ல் 'கூலி' ரிலீஸ்: அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ஜிவி பிரகாஷ், சைந்தவி விவாகரத்து வழக்கு: செப்.25ல் நேரில் ஆஜராக உத்தரவு | சத்யராஜ், காளி வெங்கட் இணைந்து நடிக்கும் 'மெட்ராஸ் மேட்னி' | மே மாதத்தோடு விஜய்யின் 'ஜனநாயகன்' படப்பிடிப்பு முடிவடைகிறது! | சோபிதா துலிபாலாவின் அடுத்த தமிழ் படம்! | ரேஸ் காரை ஓட்டும் அஜித்தின் மகன் ஆத்விக்! வைரலாகும் வீடியோ!! | எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' |
வடஇந்தியாவுக்கு லதா மங்கேஷ்கர் என்றால் தென்னிந்தியாவுக்கு பி.சுசீலா. இசைகுயில் என்றும், மெல்லிசை அரசி என்றும் போற்றப்படுகிறவர். இந்திய மொழிகளில் கடந்த 40 ஆண்டுகளில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான பாடல்களை பாடியவர். 5 தேசிய விருதுகளையும், 12 மாநில விருதுகளையும் பெற்றவர். இந்திய அரசின் பத்மபூஷண் விருது பெற்றவர். ஏற்கெனவே அவருக்கு பல பல்கலை கழகங்கள் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கின.
இந்த நிலையில் திருப்பதி ஸ்ரீபத்மாவதி மகளிர் பல்கலைக்கழகம் அவருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியது. 21வது பட்டமளிப்பு விழா பல்கலைக்கழக அரங்கில் நேற்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக வேந்தரும், ஆந்திர மாநில கவர்னருமான அப்துல் நசிர் பாடகி பி.சுசீலாவுக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக பேராசிரியர்கள், மாணவிகள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.