புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜுன் பாடிய பாடல் யு-டியூப்பில் இருந்து நீக்கம் | நல்லகண்ணுவின் 100வது பிறந்தநாள் : நேரில் சென்று வாழ்த்திய சிவகார்த்திகேயன் | எம்டி வாசுதேவன் நாயரின் நாவலை படமாக்கும் முயற்சி கடைசி வரை கனவாகவே போனது | 2024 - திருமணம் செய்து கொண்ட சினிமா பிரபலங்கள் | 2024 - தியேட்டர்களில் வெளியான படங்கள்… முழு லிஸ்ட் இதோ...! | இசை களத்தில் இறங்கினார் ஹாரிஸ் ஜெயராஜ் வாரிசு | பிளாஷ்பேக் : ரஜினி படத்தை இயக்க மறுத்த எஸ்.பி.முத்துராமன் | பிளாஷ்பேக் : திடீரென காணாமல் போன நடிகை | திரைப்பட பாடலை வெளியிட்ட முதல்வர் | இயக்குனர் எஸ்.டி.சபா திடீர் மரணம் |
புதுவையில் 9 வயது சிறுமி பாலியல் வன்புணர்வு செய்யப்பட்டு கொலை செய்யபட்ட சம்பவம் இந்தியாவையே உலுக்கியுள்ளது. இதனையடுத்து சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு நியாயம் கேட்டு பல்வேறு தரப்பினரும் குரல் கொடுக்க ஆரம்பித்துள்ளனர். புதுச்சேரி வழக்கறிஞர்கள் சங்கத்தினரும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராகமாட்டோம் என அறிவித்துள்ளனர்.
இதை பாராட்டி பேசியுள்ள மதுரை முத்து ஒட்டு மொத்த பெண் குழந்தைகளின் பெற்றோர்கள் சார்பாக அந்த வழங்கறிஞர்கள் சங்கத்தினருக்கு நன்றி கூறியுள்ளார். அதேபோல் தமிழக வழக்கறிஞர்களும் பாலியல் வன்கொடுமை செய்யும் குற்றவாளிகள் சார்பில் ஆஜராக மாட்டோம் என அறிவிக்க வேண்டும் என வேண்டுகோள் வைத்துள்ளார்.
அதேபோல் மற்றொரு சின்னத்திரை பிரபலமான அறந்தாங்கி நிஷா இதுபோன்ற சம்பவங்களால் வெளிநாட்டில் நாம் எந்த மூஞ்சை வைத்துக் கொண்டு பெருமை பேசுவோம் என்று தன் ஆதங்கத்தை கொட்டியதோடு இதுபோன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபடுபவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.