Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

“எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” : கமலின் ‛எங்கே போகிறோம்' பதிவை சுட்டிக்காட்டி இயக்குனர் லெனின் பாரதி பதில்

06 மார், 2024 - 19:03 IST
எழுத்தின் அளவு:
“Where-have-we-gathered”:-Director-Lenin-Bhartis-response-to-Kamals-Where-are-we-going-record?

புதுச்சேரி மாநிலத்தில் 9 வயது சிறுமி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டு, படுகொலை செய்யப்பட்டார். அவரின் உடல் மூட்டையால் கட்டி வாய்க்காலில் வீசப்பட்ட கொடூர செயலும் அரங்கேறி உள்ளது. இந்த சம்பவத்திற்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில் இந்த குற்றச்செயலில் ஈடுபட்டவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்ற குரல்களும் ஒலிக்க தொடங்கி உள்ளன.

நடிகர் கமல்ஹாசன் இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்து இருப்பவர், ‛‛ஒரு சமூகமாக நாம் எங்கே சென்று கொண்டிருக்கிறோம். போதைப் பொருட்களுக்கு எதிரான நமது குரல் வலுக்கட்டும். சமூகத்தைச் சீரழிக்கும் போதைக் கும்பலுக்கு எதிராக நம் எல்லோரது கரங்களும் இணையட்டும். போதையில்லா தேசத்திற்குப் பாதை போட ஒவ்வொருவரும் களமிறங்குவோம். #SayNoToDrugs'' என குறிப்பிட்டு இருந்தார்.

கமலின் இந்த பதிவை ரீ-டுவீட் செய்து பதில் அளித்துள்ள மேற்கு தொடர்ச்சி மலை படத்தின் இயக்குனர் லெனின் பாரதி, ‛‛எங்கே போகிறோம் என்று ஆராய்வதைப் போல்… கதாநாயக வழிபாட்டுச் சினிமாக்கள் மூலம் ஆணாதிக்கம், வன்முறை, போதை, வெற்றுப் பெருமை, வக்கிரம், குரூரம் என இளம் உள்ளங்களில் விஷ விதைகளை விதைத்து.. “எங்கே கூட்டி வந்திருக்கின்றோம்” என்று ஆராய வேண்டிய பொறுப்பும் சினிமாக்காரர்களுக்கு இருக்கிறது'' என பதிவிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (15) கருத்தைப் பதிவு செய்ய
புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை :  எங்கே போகிறோம்? - கமல் ; நெஞ்சம் பதறுகிறது - விஜய்புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை : ... தமிழக அரசு திரைப்பட விழா : ஜோதிகா, சுதா, கவுதம் கார்த்திக்கு விருது வழங்கி கவுரவிப்பு தமிழக அரசு திரைப்பட விழா : ஜோதிகா, ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (15)

07 மார், 2024 - 10:34 Report Abuse
அருண் குமார் புதுச்சேரின்னா உடனே அறிக்கை தமிழ் நாடானா கோமா நிலைக்கு போய்டுவாரு நம்ம ஆண்டவுரும் இந்த சினிமா துறையும்
Rate this:
07 மார், 2024 - 09:00 Report Abuse
Krishna Moorthy நடந்தது புதுச்சேரியில் என்றவுடன் தூக்கம் கலைந்து அறிக்கை விட்டு விட்டார். தமிழகத்தில் நடந்துகொண்டிருக்கும் அவலங்களை ஏனோ இவரின் காதுக்கு எட்டுவது மில்லை. கண்ணில் தென்படுவதும் இல்லை. 1 ஓசி சீட்டுக்கு பிச்சையெடுக்கும் நிலை.
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
09 மார், 2024 - 14:29Report Abuse
angbu ganeshஉன்னை போல் ஒருவானுல ஒரு வசனம், இது நம்ப வீட்டுலதான் தான் நடந்த கோவ போடணுமா பக்கத்து வீட்டுல நடந்த கோவ பட கூடாதான்னு ஆனா கமல் படத்துல பேசறதோட நின்னுட்டார், நம்ம தமிழ் நாட்டுல இவருடைய நண்பர்களின் ஆட்சின்றதால வாய் அடைத்து நிட்கின்றார்...
Rate this:
Mohan - Salem,இந்தியா
07 மார், 2024 - 08:56 Report Abuse
Mohan ஹூம். தமிழ்பட வெற்றி இயக்குநர் லோகேஷ் கனகராஜ், போதை மருந்து, கடத்தல் கொலை, சரக்கு கை மாறுவது அதற்காக கொடூர கொலைகள் செய்வது தவிர வேறு எந்த சப்ஜெக்ட்லயும் படம் எடுக்காதவர். அவர் எடுத்த போதை கடத்தல் அடிதடி படத்தை தனக்காக எடுத்து வெற்றியடைய வைத்ததற்காக டைரக்டருக்கு 25 லட்ச ரூபாயில் கார் பரிசு வழங்கிய கமலஹாசன். "Say no to drugs" என்று சொல்வது "சாத்தான் வேதம் ஓதுவது" என்பதற்கு ஒப்புமை சொல்லலாம். கனகராஜ் படங்களினால் போதை வஸ்துக்களின் வகைகளைப்பற்றி எல்லாருக்கும் தெரிந்துள்ளது. எந்த அளவு வன்முறை காட்சிகளை காட்டலாம் என்ற வரை முறை இல்லை. போதை மருந்துகள் கடத்தல் பற்றியோ வன்முறை நகராட்சிகள் இல்லாமல் படமெடுக்க இங்கே ஆளுமில்லை. நெஞ்சத்துணிவும் இல்லை
Rate this:
Chakkaravarthi Sk - chennai,இந்தியா
07 மார், 2024 - 07:10 Report Abuse
Chakkaravarthi Sk இவருடைய மையம் எந்த நாட்டில் மையம் கொண்டுள்ளது? தமிழ்நாடு கண்ணுக்கு தெரியவில்லை போலும்??? சினிமாவில் நடிப்பதே போதும் அய்யா நிஜ வாழ்க்கையில் நடித்து வேதனை படுத்தாதீர்கள் இத்தனை நாள் உறக்கம் ஏனோ??? தமிழ்நாட்டில் போதை மருந்து விற்பனை விநியோகம் கைப்பற்றல் போன்றவை நடந்த பொழுது நீங்கள் அக்கறை பட வில்லையே?? இங்கு இருந்தால் என்ன?? மனித நேய பண்பாளர் என்றால் எப்பொழுதும் எங்கும் தவறு நடக்கும் பொழுது வாய் திறக்காலாமே?? ஒரு நாள் வாய் வீச்சு ஒரு நாள் மெளனம் என்ன சார் செய்யரீங்க??? பிணத்தின் வாயில் அரிசி போடுவார்கள் அது போல உயிருள்ள மனிதரின் வாயில் பணத்தை போட்டால் வாய் அசைத்து கொள்ளுமோ?? புரியலையே மனிதாபிமானம் என்பது இருக்கா இல்லையா என்று எனக்கு தெரியாது இருந்தால் நன்றாக இருக்குமென்று நானும் வசனம் பேசலாமா???
Rate this:
raja - Cotonou,பெனின்
07 மார், 2024 - 06:33 Report Abuse
raja ஆழ்வார் பெட்டை ஆண்டவன் மக்களுக்கு ஒன்று சொல்லி நடப்பது வேறு விதமாக கிருக்கு தனமா இருக்கும்... இப்படி ஒரு கருத்து போட்டு டிரக் மாஃபியா குடும்பத்துடன் (dmk) கூட்டணி வைக்க போரான் பதவிக்காக பணத்துக்காக...
Rate this:
மேலும் 9 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in