சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் | ரிஷப் ஷெட்டி படத்தில் இருந்து விலகி விட்டேனா ? ஹனுமன் நடிகர் மறுப்பு | பிரபாஸிற்கு வில்லனாக நடிக்கும் ஈரானிய நடிகர் | சைரா நரசிம்ம ரெட்டி பட இயக்குனருடன் கைகோர்க்கும் பவன் கல்யாண் |

கடந்த வாரம் மலையாளத்தில் மஞ்சும்மேல் பாய்ஸ் என்கிற படம் வெளியானது. கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும் 10 நண்பர்கள் கொண்ட குழு, குணா குகை பகுதிக்கு செல்லும்போது அதில் ஒருவர் குகைக்குள் தவறி விழுந்து விடுவதும் அவரைக் காப்பாற்ற நண்பர்கள் போராடுவதும் தான் கதை. உண்மை சம்பவத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த படத்தில் கமலின் குணா படம் புகழ்பெற்ற குணா குகையை மையப்படுத்தி எடுக்கப்பட்டதுடன் அந்த படத்தில் இடம்பெற்ற கண்மணி அன்போடு என்கிற பாடலும் அழகாக பயன்படுத்தப்பட்டிருந்தது.
மலையாளத்தில் வெளியானாலும் ஒரு தமிழ் படம் பார்த்த உணர்வையே இந்த படம் கொடுத்தது. அதனால் தமிழகத்திலும் இந்தப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படத்தை சமீபத்தில் குணா பட இயக்குனர் சந்தான பாரதியுடன் இணைந்து பார்த்து ரசித்த நடிகர் கமல்ஹாசன், இயக்குனர் சிதம்பரம் உள்ளிட்ட மஞ்சும்மேல் பாய்ஸ் படக்குழுவினரை பாராட்டினார். அதனை தொடர்ந்து நடிகர் தனுஷும் இயக்குனர் சிதம்பரத்தை நேரில் அழைத்து வாழ்த்தினார். இன்னும் பல பிரபலங்கள் சோசியல் மீடியாக்களில் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் 20 வருடங்களுக்கு முன்பு இதே போல பாய்ஸ் என்கிற ஒரு படத்தில் ஹீரோவாக அறிமுகமான நடிகர் சித்தார்த் இந்த மஞ்சும்மேல் பாய்ஸ் இயக்குனர் சிதம்பரத்தை அழைத்து படம் குறித்து சிலாகித்து பாராட்டியுள்ளார். இந்த சந்திப்பு குறித்து 'பாய்ஸ் மல்டிவெர்ஸ்' என குறிப்பிட்டுள்ள இயக்குனர் சிதம்பரம், சங்கர் இயக்கத்தில் வெளியான பாய்ஸ் படம் பார்த்து தாங்கள் எல்லாம் எப்படி கவரப்பட்டோம் என்பது குறித்து நடிகர் சித்தார்த்துடன் இரவில் நீண்ட உரையாடல் நடத்தியதாக தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.