'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு திரையுலகில் கதாநாயகிகள் சிலர் திடீர் திடீரென புகழ் வெளிச்சம் பெற்று முன்னணி வரிசைக்கு உயர்ந்து வருகின்றனர். அப்படி ராஷ்மிகா மந்தனா, கிர்த்தி ஷெட்டி ஆகியோரை தொடர்ந்து சமீப காலமாக பிரபலமாகி உள்ளவர் நடிகை ஸ்ரீ லீலா. சமீபத்தில் வெளியான குண்டூர் காரம் படத்தில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக நடிக்கும் அளவிற்கு முன்னணி வரிசைக்கு உயர்ந்துள்ளார். இந்த படத்தில் இவர் அதிரடியாக குத்தாட்டம் போட்ட குர்ச்சி மடத்தப்பெட்டி என்கிற பாடல் 100 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்களால் பார்த்து ரசிக்கப்பட்டுள்ளது.
அதே சமயம் ஸ்ரீ லீலாவுக்கு நடனத்தில் இன்னொரு பக்கமும் உள்ளது. அதுதான் கிளாசிக்கல் டான்ஸ். சிறுவயதில் இருந்தே முறைப்படி பரதநாட்டியம் கற்றுத் தேர்ந்து பல கச்சேரிகளில் அவர் பங்கு பெற்றுள்ளார். அந்த வகையில் கிட்டத்தட்ட 15 வருடங்கள் கழித்து சமீபத்தில் ஹைதராபாத்தில் நடைபெற்ற சமதா கும்ப் கொண்டாட்டத்திற்காக மீண்டும் மேடை ஏறி கிளாசிக்கல் நடனமாடியுள்ளார் ஸ்ரீ லீலா. இந்த நிகழ்வில் மூத்த பரதநாட்டிய கலைஞர் மஞ்சு பார்கவி உடன் இணைந்து நடனம் ஆடினார் ஸ்ரீ லீலா.
இது குறித்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ள ஸ்ரீ லீலா, “நான் எப்போது கிளாசிக்கல் நடனத்தை துவங்கினேன் என்பது உங்களுக்கு தெரியுமோ, தெரியாதோ.. சிறு வயதிலேயே நான் துவங்கி விட்டேன். என்னுடைய குழுவுடன் சேர்ந்து பல கச்சேரிகளில், குறிப்பாக கோவில்களில் நடைபெறும் கச்சேரிகளில் கலந்து கொண்டுள்ளேன். அந்த காலகட்டங்களில் நான் நிறைய கற்றுக் கொண்டேன். மேலும் அவற்றை முழுமையாக அனுபவித்தேன். என்னுடைய உண்மையான பொழுதுபோக்காகவும் அது இருந்தது. இத்தனை வருடங்கள் கழித்து மீண்டும் கிளாசிக்கல் நடனமாடியது மிகவும் வித்தியாசமாக இருந்தது.. இது உங்களுக்காக என்னுடைய இன்னொரு பக்கம்” என்று கூறியுள்ளார்.