தெலுங்குக்கு முன்னுரிமை தரும் நயன்தாரா | 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வரும் விஷாலின் 'மகுடம்'! | காதலருடன் பிரேக்ப்பா? வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்த பிரியா பவானி சங்கர்! | அருள் நிதியின் 'டிமான்டி காலனி -3' படத்தின் போஸ்டர் வெளியானது! | வித் லவ் படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | புத்தாண்டு பிறந்தாச்சு..... ஓடிடியில் புதுப்படங்களும் வரிசை கட்ட ஆரம்பிச்ச்சாச்சு....! | ‛ஸ்பிரிட்' படத்தின் முதல் பார்வை வெளியீடு | 'சல்லியர்கள்' படத்தை திரையிட தியேட்டர் இல்லை: தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வேதனை | ரஜினிகாந்த்தின் ஆசைகள் 2026ல் நிறைவேறுமா? | இளையராஜா இசையில் பாடிய அறிவு, வேடன் |

குஜராத்தின் ஜாம்நகரில் நடந்த ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் ஆகியோரின் மூன்று நாள் திருமணத்திற்கு முந்தைய விழாவில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் உட்பட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். இரண்டாம் நாள் நிகழ்வான, நேற்று (மார்ச் 2) மாலை நடந்த நிகழ்ச்சியில் நடிகர் ஷாருக்கான், கருப்பு குர்தா, ஜாக்கெட் மற்றும் பைஜாமா அணிந்து மேடைக்கு வந்தார். அப்போது அவர் ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் ‛ஜெய் ஸ்ரீராம்' எனக் கூறி தனது பேச்சை துவக்கினார்
தொடர்ந்து அவர் பேசுகையில், ‛‛கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார். நடன நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீர்கள். சகோதர - சகோதரிகள் நடனமாடினார்கள். ஆனால், பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இல்லாமல் ஒருவர் வாழ்வில் முன்னேற முடியாது. எனவே, அம்பானி குடும்பத்தின் சக்திமிக்க பெண்கள் எனப்படும், குடும்பத்தின் மூன்று தேவியரை (சரஸ்வதி, லட்சுமி மற்றும் பார்வதி) அனைவருக்கும் அறிமுகப்படுத்த ஒரு கணம் ஒதுக்குகிறேன். அவர்களின் பிரார்த்தனைகளும் ஆசீர்வாதங்களும் இந்த குடும்பத்தை ஒன்றாக வைத்திருக்கின்றன'' எனக் கூறி கோகிலாபென் அம்பானி, பூர்ணிமா தலால் மற்றும் தேவயானி கிம்ஜி ஆகியோரை அறிமுகப்படுத்தி ராதிகா மற்றும் ஆனந்த் ஆகியோரை ஆசீர்வாதம் செய்ய வைத்தார்.