‛பிக்பாஸ் சீசன் 8' - கமலுக்கு பதில் களமிறங்கிய விஜய் சேதுபதி : கோலாகலமாய் துவங்கியது | சிவகார்த்திகேயனுக்கு விஜய் அளித்த காஸ்ட்லி வாட்ச்! | ஜூனியர் என்டிஆர்.,-ஐ இயக்கும் நெல்சன்? | வெறுப்பு செய்தி! - நெட்டிசன்களுக்கு பிரியாமணி வைத்த வேண்டுகோள்!! | அக்டோபர் 18ல் வெளியாகும் விமலின் ‛சார்' | கால்பந்து போட்டியை நேரில் பார்க்க ஸ்பெயின் நாட்டுக்கு சென்ற ஷாலினி அஜித் - ஆத்விக்! | கவர்ச்சியாக உடலை காட்டக்கூடாது என்பதில் உறுதி: பிரியா பவானி சங்கர் ‛ஓபன் டாக்' | ‛மும்பையில் பிறந்தாலும் மனசுல தமிழ் பொண்ணுதான்': ஹன்சிகா திடீர் மதுரை விசிட் | கங்குவா படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்து தகவல் இதோ! | பில்லா, அசல் வரிசையில் ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த பிரபு |
பாலிவுட்டின் பிரபல நடிகை அங்கிதா லோகண்டே. ஹிந்தி டிவி தொடர்களில் பிரபலமாகி மணிகர்ணிகா, பாஹி 3 உள்ளிட்ட பல ஹிந்தி படங்களில் நடித்துள்ளார். இவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் 19 வயதில் தென்னிந்திய தயாரிப்பாளர் ஒருவர் பட வாய்ப்புக்காக தன்னை படுக்கைக்கு அழைத்தார் என கூறி உள்ளார்.
இதுபற்றி அவர் மேலும் கூறியதாவது : ‛‛தென்னிந்திய படம் ஒன்றின் ஆடிசனுக்கு சென்றிருந்தேன். அந்த படத்திற்கு ஒப்பந்தம் போட வரச் சொன்னார்கள். நான் என் அம்மாவிடம் இந்த செய்தியை மகிழ்ச்சியாக கூறிவிட்டு கிளம்பிச் சென்றேன். அதேசமயம் இவ்வளவு எளிதாக நமக்கு எப்படி இந்த வாய்ப்பு அமைந்தது என யோசித்தேன். ஒப்பந்தத்தில் கையெழுத்திட சென்றபோது என்னை மட்டும் ரூமிற்கு அழைத்தனர். என்னுடன் வந்தவர் வெளியே அமர வைக்கப்பட்டார்.
எனக்கு அந்த சமயம் 19 வயது தான். சினிமாவில் நாயகியாக தீவிரமாக முயற்சித்து வந்தேன். தயாரிப்பாளருடன் நான் படுக்கையை பகிர்ந்து கொள்ளும்படி அங்கிருந்தவர் கேட்டார். அதற்கு நான் உங்கள் தயாரிப்பாளருக்கு திறமையான நடிகை தேவையில்லை, உடன் படுக்க ஒரு பெண் மட்டுமே போதும். நான் அப்படிப்பட்ட ஆள் கிடையாது என்று கூறிவிட்டு வந்துவிட்டேன். இதுபோன்று பல நிகழ்வுகளை எதிர் கொண்டுள்ளேன். அதை நினைத்தாலே ஒரு மாதிரியாக இருக்கிறது'' என்றார் அங்கிதா.
அந்த தென்னிந்திய தயாரிப்பாளர் யார் என்பதை அங்கிதா குறிப்பிடவில்லை.