மம்முட்டியின் களம்காவல் படத்தில் 22 கதாநாயகிகள் | ஏர் இந்தியா விமான சேவை மீது சிதார் இசைக் கலைஞர் ரவிசங்கரின் மகள் குற்றச்சாட்டு | துல்கர் சல்மானுக்கு தான் விருது கிடைத்திருக்க வேண்டும் : நடிகர் விநாயகன் ஆதங்கம் | தொடரும் பட ஹிந்தி ரீமேக்கில் அஜய் தேவகன் : இயக்குனர் தருண் மூர்த்தியின் சாய்ஸ் | மனதிற்குள் செய்திருந்த சபதத்தை நிறைவேற்றினாரா சமந்தா? | ‛வா வாத்தியார்' ரிலீஸில் சிக்கல் : இடைக்கால தடை விதித்த நீதிமன்றம் | திருமணம் குறித்து பேசிய ராஷ்மிகா மந்தனா | இந்திய திரையுலகை எட்டு திக்கும் கொண்டு சென்று வாழ்ந்து மறைந்த எளிமையின் சிகரம் ஏவிஎம் சரவணன் | 'டியூட்' படத்தில் மீண்டும் 'கருத்த மச்சான்' பாடல் | அமெரிக்க ஸ்டுடியோவுக்குச் செல்லும் வெங்கட் பிரபு, சிவகார்த்திகேயன் |

நடிகர் சரத்குமாரின் முன்னாள் மனைவி சாயாதேவி. நடிகை வரலட்சுமியின் தாயார். அவர் தற்போது சினிமா நடிகை ஆகியிருக்கிறார். பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார். கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்த சாயாதேவி உயர் போலீஸ் அதிகாரியின் மகள். சரத்குமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இரண்டு பெண் குழந்தைகளுக்கு தாயான பிறகு சரத்குமாரை பிரிந்து தனியாக வாழ்ந்து வருகிறார். 'மிஸ் பெங்களூரு' பட்டம் வென்று சமூக ஆர்வலராக பணியாற்றி வரும் சாயாதேவி தற்போது நடிகையாகி அனைவரையும் ஆச்சரியப்படுத்தி இருக்கிறார்.
நடிகை ஆனது குறித்து சாயாதேவி கூறும்போது : நான் தற்போது சேவ் சக்தி அறக்கட்டளை மூலமாக நிறைய சமூக சேவைகள் செய்து வருகிறேன். இந்த நிலையில்தான் நெருங்கிய குடும்ப நண்பர் பாலா இயக்கும் படத்தில் நடிக்க வாய்ப்பு வந்தது. நீங்கள் தான் நடிக்க வேண்டும் என்று வற்புறுத்தி கேட்டார். அந்த கேரக்டரும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. அதனால் ஒப்புக்கொண்டேன். எனக்கு நடிப்பு புதுசு. என் குடும்பமே நடிப்புத் துறையில் இருந்தாலும், நான் நடிப்பதற்கு தயங்கினேன். மகள் வரலட்சுமி தான் தைரியம் கொடுத்து நடிக்க வைத்தார். நல்ல கேரக்டர்கள் கிடைத்தால் தொடர்ந்து நடிப்பேன்" என்றார்.