உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் | பிளாஷ்பேக் : அந்த காலத்திலேயே கலக்கிய 'டவுன் பஸ்' | தினமும் எம்ஜிஆரை வேண்டிக் கொண்டு நடித்தேன் : கார்த்தி | ரஜினி மாமனாராக நடிக்க வேண்டியது : திண்டுக்கல் லியோனி சொன்ன புது தகவல் | 25 வருடங்களுக்கு முன்பே ஐஸ்வர்யா ராய் ஜோடியாக நடிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிய பார்த்திபன் |

கடந்த 2004ல் தரணி இயக்கத்தில் விஜய், த்ரிஷா, பிரகாஷ்ராஜ் ஆகியோர் இணைந்து நடித்து வெளிவந்த படம் 'கில்லி'. இது தெலுங்கில் வெளிவந்த ஒக்கடு படத்தின் ரீமேக் படமாக வெளி வந்தாலும் அன்றைய காலகட்டத்தில் அதிக வசூலித்த தமிழ் படமாக மாறியது. விஜய்யின் சினிமா கேரியரில் உள்ள முக்கியமான படங்களில் ‛கில்லி'-யும் ஒன்று. வித்யாசாகர் இசையில் வெளிவந்த அத்தனை பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தது.
சமீபகாலமாக பழைய படங்களை ரீ-ரிலீஸ் செய்து வருகின்றனர். இதற்கு ரசிகர்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. அந்தவகையில் 3, வாரணம் ஆயிரம், வேட்டையாடு விளையாடு, பில்லா உள்ளிட்ட படங்கள் வரிசையில் இப்போது கில்லி படமும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளது. அதன்படி வருகின்ற ஏப்ரல் 17ம் தேதி அன்று கில்லி படம் ரீ ரிலீஸ் ஆவதாக அறிவித்துள்ளனர்.