ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
யுவன்ஷங்கர் ராஜா தயாரிப்பில், ஹரிஷ் கல்யாண், ரைசா வில்சன் மற்றும் பலர் நடிப்பில் 2018ல் வெளிவந்த 'பியார் பிரேமா காதல்' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் இளன். தற்போது கவின், ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், லால் மற்றும் பலர் நடிக்கும் 'ஸ்டார்' படத்தை இயக்கி வருகிறார்.
இப்படத்தின் மேக்கிங் வீடியோ ஒன்று நேற்று வெளியானது. படத்தின் தலைப்பே இது ஒரு சினிமா பற்றிய படம் என்பதை புரிய வைத்துவிடும். நேற்றைய வீடியோ யுவன் பாடிய 'கனவே… என் இரவைக் கேட்டாய்…' என்ற பாடலுடன் வெளியானது.
அந்த வீடியோவைப் பகிர்ந்து தனது கனவு குறித்து இயக்குனர் இளன், “முதல் படம் நான் மெக்கானிக்கல் லேப் யூனிபார்ம் அணிந்து, என் கல்லூரியில் 'பன்க்' செய்து குறும்படத்தின் படப்பிடிப்பு நடத்திய போது எடுத்தது. இரண்டாம் ஆண்டில் நான் திரைப்பட இயக்குனராக வேண்டும் என்று கனவு கண்ட போது, என் தைரியத்தை வரவழைத்து என் பெற்றோரையும் சம்மதிக்க வைத்தேன். அவர்கள் நம்பினார்கள், கனவுகள் நனவாகும்,” என்று குறிப்பிட்டுள்ளார்.
கனவுகளும், நம்பிக்கையும் தான் வாழ்க்கையின் வெற்றிக்கான அடிப்படை என்பதை தனது பதிவின் மூலம் உணர்த்தியிருக்கிறார் இளன்.