Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

பழைய தலைப்பு ஏன்? - 'அமரன்' இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி

17 பிப், 2024 - 16:11 IST
எழுத்தின் அளவு:
Why-the-old-title?---Amaraan-director-Rajkumar-Periyasamy

தமிழகத்தைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற தீவிரவாதத் தாக்குதலுக்கு எதிராக மூன்று தீவிரவாதிகளைக் கொன்று வீரமரணம் அடைந்தார். அவருடைய உயிர்த்தியாகத்திற்கு அசோக சக்கரம் வழங்கி கவுரவிக்கப்பட்டது.

அவரது பயோபிக் படமான 'அமரன்' படத்தை கமல்ஹாசனின் தயாரிப்பு நிறுவனம், சோனி பிக்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது. சிவகார்த்திகேயன், சாய் பல்லவி மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படத்தை கவுதம் கார்த்திக் நடித்த 'ரங்கூன்' படத்தை இயக்கிய ராஜ்குமார் பெரியசாமி இயக்கி வருகிறார்.

பழைய படத் தலைப்பை இப்படத்திற்கு வைத்துள்ளது குறித்து சிலர் கேள்விகளை எழுப்பியிருந்தனர். கே ராஜேஷ்வர் இயக்கத்தில், கார்த்திக், பானுப்ரியா மற்றும் பலர் நடிப்பில் 'அமரன்' என்ற பெயரில் ஒரு படம் வெளிவந்துள்ளது. எதற்கு 'அமரன்' என்ற பழைய தலைப்பு என்பது குறித்து இயக்குனர் பதிவிட்டுள்ளார்.

“இப்படத்தின் திரைக்கதைக்கு நான் எழுதிய முதல் வார்த்தை 'அமரன்'. அதற்கு 'அழியாதவன், போர்வீரர், தெய்வீகமானவர்' என்று அர்த்தம். இந்த நினைவு கூறத்தக்க தலைப்பை எங்களுக்கு வழங்க சம்மதித்த இயக்குனர் கே ராஜேஷ்வர் அவர்களுக்குத் இத்தருணத்தில் நன்றி கூறுகிறேன். நன்றி சார், எனக்கு பெருமிதமாக உள்ளது.

எனக்காக அவரை அணுகி உறுதியாக பெற்றுத் தந்த எனது அன்புக்குரிய கவுதம் கார்த்திக் மற்றும் கார்த்திக் சார் ஆகியோருக்கு நன்றி. இதை ஒருங்கிணைத்த பிஆர்ஓ சிங்காரவேலு மற்றும் அன்னலட்சுமி பிக்சர்ஸ் சுவாமிநாதன் சார் ஆகியோருக்கு சிறப்பு நன்றி,” என்று குறிப்பிட்டுள்ளார்.

Advertisement
கருத்துகள் (1) கருத்தைப் பதிவு செய்ய
புதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தேவாரா படக்குழுபுதிய ரிலீஸ் தேதியை அறிவித்த தேவாரா ... 'படை தலைவன்' படப்பிடிப்பில் மீண்டும் சண்முகபாண்டியன் 'படை தலைவன்' படப்பிடிப்பில் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (1)

ram - mayiladuthurai,இந்தியா
22 பிப், 2024 - 15:24 Report Abuse
ram அமரன் என்று தலைப்பு உள்ள படங்கள் இங்கு ஓடவில்லை, இவர்கள் பேரை மாத்தலாம்.
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in