பிரதீப் ரங்கநாதன் படத்தில் கதையின் நாயகியாக மமிதா பைஜூ | சமூகத்தை திருப்திப்படுத்த திருமணம் செய்ய மாட்டேன் : சிம்பு | பிச்சைக்காரன் 3 பிரமாண்டமாக உருவாகும் : விஜய் ஆண்டனி | காதலர் தினத்தில் வெளியாகும் சீதா பயணம் படத்திற்கு யு சான்றிதழ் | ரஜினி, கமல் இணையும் படம் : மகள்கள் பங்கு இருக்குமா? | உயிருள்ளவரை உஷா ரீ ரிலீஸ் : வாய்ஸ் கொடுப்பாரா சிம்பு | ரஜினிகாந்த் பாராட்டினார்: 'வித் லவ்' காவ்யா நெகிழ்ச்சி | 'ஜனநாயகன்' பிப்ரவரியில் ரிலீசா? | பிப்ரவரி 12ல் ஓடிடியில் 'தலைவர் தம்பி தலைமையில்' | 'இது ஒன்னும் தியேட்டர் கிடையாது': அறிவுரை கூறிய அஜித் |

நடிகர் மம்முட்டி நடிப்பில் கடந்த வருடம் வெளியான கண்ணூர் ஸ்குவாட், காதல் : தி கோர், நண்பகல் நேரத்து மயக்கம் என அனைத்து படங்களும் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன. வசூல் ரீதியாகவும் டீசன்டான வெற்றியை பெற்றன. இந்த நிலையில் மம்முட்டி நடிப்பில் பிரம்மயுகம் என்கிற படம் தற்போது வெளியாகி உள்ளது. பதினெட்டாம் நூற்றாண்டில் நடைபெறுவதாக இந்த படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் குஞ்சுமோன் போட்டி என்கிற 70 வயதுக்கு மேற்பட்ட கதாபாத்திரத்தில் மம்முட்டி நடித்துள்ளார்.
ஆனால் இந்த பெயர் 200 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த தங்களது மூதாதையரின் பெயரை குறிப்பிடுவது போலவும் அவரது புகழுக்கு களங்கம் ஏற்படுத்துவது போலவும் இருப்பதாக கூறி இந்தப்படத்திற்கு வழங்கப்பட்ட சென்சார் சான்றிதழை திரும்ப பெற வேண்டும் என்றும் சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இதனை விசாரித்த நீதிமன்றம் இது குறித்து பதில் அளிக்க படக்குழுவினருக்கு உத்தரவிட்டது. படம் ரிலீஸ் ஆகும் நேரத்தில் இந்த பெயர் பிரச்சினையால் ரிலீஸ் தடைப்படக்கூடாது என முடிவு செய்த படக்குழுவினர் மம்முட்டியின் கதாபாத்திரமான குஞ்சுமோன் போட்டி என்பதை கொடுமோன் போட்டி என மாற்றி தணிக்கை குழுவின் அனுமதி பெற்று படத்தை வெளியிட்டுள்ளனர்.




