புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு தெலுங்கில் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் புஷ்பா. இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தின் இரண்டாம் பாகம் தற்போது புஷ்பா 2 : தி ரைஸ் என்கிற பெயரில் தயாராகி வருகிறது. முதல் பாகத்தில் தேவிஸ்ரீ பிரசாத் இசையில் இடம் பெற்ற சாமி சாமி பாடலும் ஊ அண்டாவா(ஊ சொல்றியா...) என்கிற பாடலும் சென்சேஷனல் ஹிட் ஆகின.
இதில் சாமி சாமி பாடலுக்கு படத்தின் நாயகி ராஷ்மிகாவே நடனமாடியிருந்தார். ஊ அண்டாவா பாடலுக்கு மட்டும் சிறப்பு தோற்றத்தில் நடிகை சமந்தா நடனம் ஆடி இருந்தார். இந்த இரண்டு பாடல்களுமே ராஷ்மிகா மற்றும் சமந்தாவுக்கு மிகப்பெரிய புகழைப் பெற்றுத் தந்தன. இந்த நிலையில் இந்த இரண்டாம் பாகத்தில் இதேபோன்று ஒரு ஐட்டம் பாடலுக்கு ஆடுவதற்காக பாலிவுட் நடிகை திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது. சமந்தாவைப் போல திஷா பதானியும் இந்த ஐட்டம் பாடல் மூலமாக அதிகம் பிரபலமாவார் என எதிர்பார்க்கலாம்.