ரஜினியின் ‛கூலி' படத்தின் பத்து நாள் வசூல் வெளியானது! | பிளாஷ்பேக்: அபூர்வ கலைப் படைப்பாக வந்து, ஆச்சர்யமிகு வெற்றியைப் பதிவு செய்த “அஞ்சலி”யின் அனுபவ ஞாபகங்கள் | ‛பாகுபலி தி எபிக்' படம் குறித்து ராஜமவுலி வெளியிட்ட தகவல்! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் தியேட்டர் உரிமை குறித்த தகவல் வெளியானது! | 63வது பிறந்த நாளை கொண்டாடிய ராதிகா! | 'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி |
சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் படம் கங்குவா. பாலிவுட் நடிகை திஷா பதானி கதாநாயகியாக நடிக்க, பாலிவுட் நடிகர் பாபி தியோல் வில்லனாக நடிக்கிறார். படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து தற்போது அதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன. இந்த படத்தின் கலர் கரெக்ஷன் எனப்படும் டிஐ பணி துவங்கியுள்ள நிலையில் படத்தின் நாயகன் சூர்யா நேரடியாக சம்பந்தப்பட்ட இடத்திற்கே வந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகளை பார்வையிட்டார்.
இந்த தகவலை புகைப்படத்துடன் சோசியல் மீடியாவில் வெளியிட்டுள்ள படத்தின் ஒளிப்பதிவாளர் வெற்றி பழனிச்சாமி, “அன்புள்ள சூர்யா சார்.. நீங்கள் எங்களுடன் இந்த டிஐ பணியில் இணைந்ததில் நாங்கள் உற்சாகமாக இருக்கிறோம். உங்களுடைய பாராட்டுக்கள் என்பது எங்களுக்கு நிறையவே உற்சாகம் தரும். போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முழு வீச்சில்..” என்று தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.