இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? | பிளாஷ்பேக்: உண்ணாவிரதம் இருந்து வெள்ளித்திரையின் உச்சம் தொட்ட பி யூ சின்னப்பா |

டிஜிட்டல் யுகத்தில் அனைத்துமே டிஜிட்டல் மயமாகிவிட்டது. அதற்கு சினிமாவும் விதிவிலக்கல்ல. இப்போதெல்லாம் டிஜிட்டல் புரொஜக்டர்கள் மூலமாகத்தான் தியேட்டர்களில் திரைப்படங்களைத் திரையிடுகிறார்கள்.
பத்து வருடங்களுக்கு முன்பு பிரிண்ட்கள் என அழைக்கப்படும் பிலிம் ரோல் மூலம்தான் தியேட்டர்களில் திரையிடல் நடந்தது. பின்னர் படிப்படியாக டிஜிட்டல் புரொஜக்ஷனுக்கு மாறியது.
பிரிண்ட்களை வைத்து திரையிடல் நடந்த புரொஜக்டர்கள் பலவும் காட்சிப் பொருட்கள் ஆனது. ஆனால், சில தியேட்டர்களில் அந்த பிரிண்ட் புரொஜக்டர்களை தூக்கிப் போடாமல் அதே புரொஜக்ஷன் கேபினுக்குள் பாதுகாத்து வருகிறார்கள்.
பிரிண்ட்களில் வெளியான சில முக்கியமான படங்கள் மட்டும் ரீ-ரிலீஸ் செய்வதற்காக டிஜிட்டலில் மாற்றப்பட்டு, அதன் ஆடியோ தரமும் உயர்த்தப்பட்டு டிஜிட்டல் புரொஜக்ஷனாக திரையிடப்பட்டது. அப்படி டிஜிட்டலுக்கு மாற்றப்படாத படங்கள் மட்டுமே ஆயிரக்கணக்கில் இருக்கிறது.
எவ்வளவுதான் டிஜிட்டல் வந்தாலும் பழைய பார்முலாக்களின் மகத்துவமே தனி. இப்போதைய ரிலீஸ் டிரெண்டில் சில பழைய படங்களை அதே பிரிண்ட்கள் மூலம் பிரிண்ட் புரொஜக்டர்கள் மூலம் திரையிட உள்ளார்கள்.
சென்னையில் உள்ள கமலா தியேட்டர் விஜய், ஷாலினி நடித்து 1997ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'காதலுக்கு மரியாதை' படத்தை அடுத்த வாரம் பிப்ரவரி 23ம் தேதி திரையிட உள்ளது. அதோடு அஜித், சிம்ரன் நடித்து 1999ம் ஆண்டு வெளிவந்த சூப்பர் ஹிட் படமான 'வாலி' படத்தையும் அதே நாளில் திரையிட உள்ளதாகவும் அறிவித்துள்ளது. இரண்டு படங்களுக்கான கட்டணம் ரூ.69 மட்டுமே என்றும், இதை தல, தளபதி டே என்றும் தெரிவித்துள்ளார்கள்.
மற்றொரு தியேட்டரான ஜிகே சினிமாஸ் மார்ச் மாதம் விருகம்பாக்கத்தில் உள்ள அவர்களது தியேட்டரில் பிரிண்ட் புராஜக்டர், டிடிஎஸ் மூலம் 'பிளேபேக் பெஸ்டிவல்' நடத்தப் போவதாகவும், அதற்கான கட்டணம் ரூ.50 என்றும் அறிவித்துள்ளது.
பழைய படங்களுக்கான மார்க்கெட் ஒன்றும், அதற்கான ரசிகர்களும் தற்போது புதிதாக உருவாகி வருகிறார்கள். சென்னையில் நடக்கும் இந்த மாற்றம், மாநிலம் முழுவதும் மற்ற இடங்களிலும் பரவினால் பழைய படங்களை மீண்டும் பெரிய திரையில் தியேட்டர்களில் பார்க்கும் வாய்ப்புகள் கிடைக்கும்.