நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தனுஷ் இயக்குனராக தனது மூன்றாவது படத்தை இயக்கி வருகிறார். இதற்கு 'நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்' என தலைப்பு வைத்துள்ளனர். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் நடிக்கின்றார். அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய வேடத்தில் நடிக்கின்றனர் . ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுன்டர்பார் பிலிம்ஸ், ஆர்.கே.புரொடக்சன்ஸ் என இரு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றனர்.
இதன் படப்பிடிப்பு பல கட்டமாக சென்னையில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று பிப்.14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு ஸ்பெஷல் புதிய போஸ்டர் ஒன்றை தனுஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடற்கரை மணலில் நிலவின் பின்னணியில் பவிஷ், அனைகா இருவரும் அமர்ந்து இருப்பது போன்று அந்த போஸ்டர் உள்ளது.