'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
துணிவு படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் கமல்ஹாசனின் 233வது படத்தை வினோத் இயக்கவுள்ளதாக அறிவித்திருந்தனர். பல கட்டமாக இதன் முன் தயாரிப்பு பணிகள் நடைபெற்று, தற்போது கமலை வைத்து வினோத் இயக்கும் படம் தற்காலிகமாக தள்ளி வைக்கப்பட்டது. இதனால் நடிகர் தனுஷின் புதிய படத்தை இயக்குவதற்கான பணிகளை மீண்டும் வினோத் தொடங்கியுள்ளார். இதனை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கின்றார்.
இந்த படத்தின் படப்பிடிப்பிற்காக தனுஷ் ஜூன், ஜூலை மாதங்களில் கால்ஷீட் ஒதுக்கியுள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் கதை களம் சதுரங்க வேட்டை பாணியில் உருவாகும் என வினோத் தெரிவித்தார். இந்த நிலையில் கமலை வைத்து வினோத் இயக்குவதாக இருந்த மிலிட்டரி பின்னனியில் உள்ள கதையை தற்போது தனுஷை வைத்து இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.