2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

நடிகர் சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் மற்றும் தி லிட்டில் வேவ் புரொடக்ஷன்ஸ் இணைந்து தயாரித்து வரும் 'கொட்டுக்காளி' என்கிற படத்தை 'கூழாங்கல்' பட இயக்குனர் பி.எஸ்.வினோத்ராஜ் இயக்குகிறார். இதில் சூரி, அன்னா பென் இருவரும் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்தை திரைப்பட விழாவில் திரையிடுவதற்காக உருவாக்கினர் என கூறப்படுகிறது. இதன் படப்பிடிப்பு முடிவடைந்து கடந்த சில மாதங்களாக போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் வருகின்ற பிப்ரவரி 16ம் தேதி முதல் 25ம் தேதி வரை 74வது பெர்லின் திரைப்பட விழாவில் கொட்டுக்காளி படத்தை முதல் முறையாக திரையிடுவதாக அறிவித்துள்ளனர்.