முதல்முறையாக ஜோடி சேரும் நானி, பூஜா ஹெக்டே | வெங்கடேஷ் ஜோடியான கே.ஜி.எப் நாயகி! | பிப்ரவரி மாதத்தை குறிவைக்கும் இரண்டு வானம் படக்குழு | நவ., 7ல் ‛அதர்ஸ்' படம் ரிலீஸ் | ஓடிடியில் நேரடியாக வெளியான தீபாவளி படம் | பிளாஷ்பேக்: ஸ்ரீதேவி தான் வேண்டும் என்று அடம்பிடித்த ரஜினி | பிளாஷ்பேக் : 'மனோகரா' கதை ஷேக்ஸ்பியர் எழுதியது | ஒரே நேரத்தில் இரு லட்சுமிகாந்தன் கொலை வழக்கு படமா? | சூப்பர் மாரி சூப்பர் : ‛பைசன்' படத்திற்கு ரஜினி பாராட்டு | ‛பரிசு' : லட்சியத்திற்காக போராடும் பெண்ணின் கதை |

இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் குமார் தற்போது தங்கலான், கங்கனா ரனாவத்தின் எமர்ஜென்சி, சூரரை போற்று ஹிந்தி ரீமேக், சிவகார்த்திகேயன்-21, சூர்யா-43 உள்பட பல படங்களுக்கு பிஸியாக இசையமைத்து வருகிறார். இது தவிர கள்வன், ரெபெல், டியர் போன்ற படங்களிலும் நடித்து வருகிறார்.
இந்நிலையில் சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, எத்தனை கோடி கொடுத்தாலும் சூதாட்ட விளம்பரங்களில் மட்டும் நான் ஒருபோதும் நடிக்க மாட்டேன். அதோடு கூல்டிரிங்ஸ் விளம்பரங்களில் நடிக்க மாட்டேன் என்று கூறிய ஜி.வி.பிரகாஷ், விளையாட்டை ஊக்கப்படுத்தும் விளம்பர தூதராக இருப்பதற்கு தான் மிகவும் ஆர்வமாக இருப்பதாகவும் தெரிவித்தார்.




