அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் | 'கட்டா குஸ்தி 2' படத்தில் ஐஸ்வர்ய லட்சுமி இருக்கிறாரா? | கண்ணப்பா டீமுக்கும், ஹீரோயினுக்கும் என்ன பிரச்னை |
அசாம் மாநிலத்தை சேர்ந்தவர் கயடு லோஹர். 'முகில்பேட்' என்ற கன்னட படத்தில் அறிமுகமான இவர் 'பத்தொன்பதாம் நூற்றாண்டு' என்ற படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமானார். அதன் பிறகு 'தெல்லூரி' என்ற தெலுங்கு படத்தில் அறிமுகமானார். தற்போது 'நிலா வரும் வேளை' என்ற படத்தின் மூலம் தமிழுக்கு வருகிறார். இந்த படத்தில் அவர் காளிதாஸ் ஜெயராம் ஜோடியாக நடிக்கிறார். மிராக்கிள் மூவீஸ் சார்பில் ஸ்ருதி செல்லப்பா தயாரிக்கிறார்.
இதனை 'என்ன சொல்ல போகிறாய்' படத்தை இயக்கிய ஏ.ஹரிகரன் இயக்குகிறார். படம் பற்றி அவர் கூறியதாவது: இது த்ரில்லர் வகை கதை. படத்தில் காடு ஒரு முக்கிய லொகேஷனாக இருக்கும். அதுதவிர பல லொகேஷன்களில் படமாக்குகிறோம். இந்த படத்தை ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவாக்கவில்லை. தமிழில் எடுத்துவிட்டு, பிறகு தெலுங்கிலும் படப்பிடிப்பு நடத்த உள்ளோம். இரு மொழி ரசிகர்களுக்கும் இந்த கதை, கனெக்ட் செய்யும் வகையில் இருக்கும். மலையாளத்தில் 19ம் நூற்றாண்டு படத்தில் நடித்தவர் கயடு லோஹர். இவர் தெலுங்கிலும் நடித்துள்ளார். இப்படம் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். இப்படத்தின் தெலுங்கு பதிப்பிலும் இவர்தான் ஹீரோயின். 1970களில் நடக்கும் கதையாக இது உருவாகிறது. என்றார்.