மாவீரன் படத்தை அடுத்து ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். அவருக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீர், சென்னை பகுதிகளில் நடைபெற்று தற்போது இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் தயாரிக்கும் இந்த படத்தின் பர்ஸ்ட் போஸ்டர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் பிப்ரவரி 17ம் தேதி வெளியாகிறது. பர்ஸ்ட் லுக் போஸ்டரை தொடர்ந்து டீசர், டிரைலர், ஆடியோ விழா என அடுத்தடுத்த அப்டேட்கள் வெளியாக இருப்பதாகவும் அப்பட வட்டாரங்களில் கூறுகிறார்கள்.