6 மொழிகளில் தயாராகும் சிலந்தி 2ம் பாகம் | தயாரிப்பு நிறுவனத்தின் பெயரில் மோசடி: சிவகார்த்திகேயன் எச்சரிக்கை | தமிழில் மீண்டும் ஒரு ஜோம்பி படம் | ரவி மோகன் விருது விழாவில் கெனீஷாவின் இசை நிகழ்ச்சி | பிளாஷ்பேக்: குஷ்புவை நிராகரித்த பார்த்திபன் | பிளாஷ்பேக்: தணிக்கை குழுவால் சிதைக்கப்படட 'நல்ல தீர்ப்பு' | 2026 - வசூல், லாபத்தில் முதலிடத்தில் 'தாய் கிழவி' | ஜனநாயகன் : புது டைட்டில் கார்டு வேலைகள் ஆரம்பம்… | 'பெத்தி' டிரைலர் வெளியீட்டு விழா மும்பைக்கு மாற்றம் | வெற்றி தோல்வி நிரந்தரம் இல்லை முதல்வருக்கு பாலா வாழ்த்து செய்தி |

1990களில் பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருந்தவர் பார்க்கா மதன். 'கிலாடியோன் கா கிலாடி' என்ற படத்தில் அக்ஷய்குமார் ஜோடியாக அறிமுகமானார். இந்த படம் வெற்றி பெற்றாலும் அவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் அமையவில்லை. அதன் பிறகு, ராம் கோபால் வர்மா இயக்கத்தில் அவர் நடித்த 'பூட்' அவருக்கு ரீ -என்ட்ரி கொடுத்தது. 1857 கிராந்தி, கர் ஏக் சப்னா உள்பட பல படங்களில் நடித்தார்.
பல வருடங்கள் மாடலிங் துறையில் இருந்த பார்க்கா மதன் 1994ம் ஆண்டு நடைபெற்ற 'மிஸ் இந்தியா' போட்டியில் நடிகைகள் ஐஸ்வர்யா ராய் மற்றும் சுஷ்மிதா சென் ஆகியோருடன் போட்டியிட்டார். இதில் சுஷ்மிதா சென் வெற்றி பெற்றார்.
கடந்த 2012ம் ஆண்டு இவர் நடிப்பை விட்டு விலகுவதாகவும் புத்த மதத்தைத் தழுவப் போவதாகவும் அறிவித்தார். அதன்பிறகு தலையை மொட்டை அடித்துக் கொண்டு ஒரு துறவியை போல வாழ்ந்தார். என்றாலும் தற்போது முறைப்படி புத்த துறவியாக மாறி இருக்கிறார். கர்நாடகாவில் உள்ள செரா ஜெய் மடாலயத்தின் ஹர்டாங் காங்செனில் புத்த துறவியாக ஆனார். தனது பெயரை வென் கைல்டென் சம்டென் எனவும் மாற்றினார்.