100 நாடுகள், 10 ஆயிரம் ஸ்கிரீன், 1000 கோடி சாதனை படைக்குமா ரஜினியின் கூலி | விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! |
கடந்த சில மாதங்களுக்கு முன்பு பாலிவுட்டில் ரன்பீர் கபூர், ராஷ்மிகா மந்தனா இணைந்து நடித்த அனிமல் என்கிற திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அர்ஜுன் ரெட்டி புகழ் இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கியிருந்தார். இந்த படம் வெளியான நாள் முதலே பெண்களை மிகவும் மட்டம் தட்டும் விதமாகவும் அவர்களை பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கும் விதமாகவும் உருவாகி இருப்பதாக எதிர்ப்பு குரல் எழுந்தது. இதையெல்லாம் தாண்டி இந்த படம் கிட்டத்தட்ட 900 கோடி ரூபாய் வசூலித்தது.
இப்போதும் கூட ஒரு சிலர் நேரம் கிடைக்கும்போது அனிமல் திரைப்படத்தை பற்றி விமர்சிக்க தவறுவதில்லை. அந்த வகையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு நிகழ்ச்சியில் பேசிய அமீர்கானின் முன்னாள் இரண்டாவது மனைவி கிரண் ராவ் சமீப காலமாக வெளிவரும் படங்களில் பெண்களை மோசமாக சித்தரிக்கிறார்கள் என்று பொத்தாம் பொதுவாக கூறியிருந்தார். ஆனால் அனிமல் இயக்குனர் சந்தீப் அது தன்னைத்தான் குறிக்கிறது என எடுத்துக்கொண்டு கிரண் ராவுக்கு நேரடியாகவே பதில் அளித்துள்ளார்.
இது பற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “நீங்கள் முதலில் உங்கள் கணவரது படங்களை பாருங்கள். கடந்த 20 வருடத்திற்கு முன்பு அவர் நடித்த தில் என்கிற படத்தில் இல்லாத காட்சியையா நான் வைத்து விட்டேன்” என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இவரது இந்த பதில் குறித்து கிரண் ராவிடம் கேட்கப்பட்டபோது, “நான் இதுவரை சந்தீப் ரெட்டி வங்காவின் படங்களை பார்த்ததே இல்லை. அப்படி பார்த்திருந்தால் தானே அவரது படத்தைப் பற்றி குறை சொல்வதற்கு ? அவரைப்பற்றி நான் சொல்லாதபோது எதற்காக இப்படி என்னை பற்றி விமர்சித்துள்ளார் என்று தெரியவில்லை” என்று கூறியுள்ளார்.