''அப்பா ஒரு குழந்தை; ஆதாரமற்ற வதந்திகளை பரப்பாதீர்கள்'' - ஏ.ஆர்.ரஹ்மான் மகன் வேதனை | அழகுக்காக ஸ்ரீதேவி பட்ட சிரமம் : போனி கபூர் தகவல் | 'வேவ்ஸ்' ஓ.டி.டி., தளம் : பிரசார் பாரதி துவக்கம் | நவ.26ம் தேதியில் விடுதலை-2 படத்தின் இசை வெளியீட்டு விழா | தெலுங்கில் அறிமுகமாகும் மமிதா பைஜூ | திருமணத்திற்கு தயாராகும் தமன்னா | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த சந்தானம் | நடிகை சீதா வீட்டில் நகை திருட்டு : போலீசில் புகார் | சமந்தா சொல்வது உண்மைதான் : அர்ஜுன் கபூர் ஒப்புதல் | சர்ச்சைகளை நீர்த்துப்போக செய்யும் விதமாக தயாராகிறதா மோகன்லால் - மம்முட்டி படம்? |
120 படங்களுக்கு மேல் இயக்கிய ராம நாராயணன் இயக்கிய படம் 'ஆடிவெள்ளி'. அவரது படங்களிலேயே அதிக நாட்கள் ஓடி அதிக வசூலையும் குவித்தபடம். 1990 பிப்ரவரி 2ம் தேதி வெளியானது. இதில் சீதா, நிழல்கள் ரவி, சந்திரசேகர், அருணா, வெ.ஆ.மூர்த்தி, ஒய்.விஜயா, நடித்திருந்தனர். யானையும், பாம்பும் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். என்.கே.விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்தார். சங்கர்-கணேஷ் இசை அமைத்திருந்தனர். 'வெள்ளிக்கிழமை ராமசாமி வர்றான்டா' என்ற பாடலும், வெள்ளிக்கிழமை ராமசாமி என்ற பெயர் கொண்ட யானையின் சேட்டைகளும் அன்றைய காலகட்டத்தில் மிகவும் பிரபலம்.
இந்நிலையில், 34 வருடங்களுக்குப் பிறகு 'ஆடி வெள்ளி' படம் ரீமேக் செய்யப்படுகிறது. இதுகுறித்து ராம.நாராயணனின் மகனும், தயாரிப்பாளர் சங்கத் தலைவருமான முரளி ராமசாமி கூறியதாவது:
ஆடி வெள்ளி நம் மண்ணின் நம்பிக்கைகளோடு சேர்ந்த படம் என்பதால் பெண்கள் அதனை வெற்றிப் படமாக்கினார்கள். இப்போதும், கொண்டாடப்படும், பேசப்படும் படமாக ஆடி வெள்ளி இருக்கிறது. இன்றைய காலத்துக்கும், டெக்னாலஜிக்கும், டிரெண்டுக்கும் ஏற்ப படத்தை ரீமேக் செய்ய திட்டமிட்டுள்ளோம். இப்படத்திற்கு, கிராபிக்ஸ் பணிகள் அதிகம் தேவைப்படும். அதை உள்வாங்கி இயக்கும் இயக்குநரை வைத்து எடுக்கலாம் என்று திட்டமிட்டுள்ளோம்.
தற்போது, திரைக்கதையை டிரெண்டுக்கு ஏற்றவாறு மெருகூட்டும் பணிகள் வேகமாக நடந்து கொண்டிருக்கின்றன. தமிழ் சினிமாவில் விலங்குகளை பயன்படுத்த நிறைய கட்டுப்பாடுகளையும் விதிகளையும் கடைபிடிக்க வேண்டியுள்ளது. விலங்குகளை பயன்படுத்தும்போது, மிகவும் பாதுகாப்பாக எடுக்க வேண்டியுள்ளது. இந்த சவால்களையெல்லாம் திறமையாக கையாள்வோம் என்ற நம்பிக்கை உள்ளது. இதில் நயன்தாரா நடித்தால் சிறப்பாக இருக்கும். இதற்காக அவரை அணுக முடிவு செய்திருக்கிறோம். என்றார்.