2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

தமிழ் சினிமாவின் பெரிய கலை குடும்பம் விஜயகுமாருடையது. அவருக்கு அருண் விஜய் என்ற ஒரே மகன் தான், மற்றவர்கள் அனைவரும் மகள்கள். 5 மகள்களில் கவிதா, வனிதா, பிரீத்தா, ஸ்ரீதேவி ஆகியோர் நடிக்க வந்தார்கள். அனிதா நடிக்கவில்லை. அனிதா மருத்துவராக உள்ளார். இவர் தன்னுடன் படித்த கோகுல் என்பவரைத் காதல் திருமணம் செய்து கொண்டார். இவர்கள் தற்போது வெளிநாட்டில் வசிக்கிறார்கள். இந்த தம்பதிகளுக்கு கோகுல் என்ற மகனும், தியா என்ற மகளும் உள்ளனர். இதில் தியா அம்மா, அப்பாவைப் போன்று மருத்துவராக மருத்துவம் படித்து வருகிறார்.
தியாவுக்கு தற்போது திருமணம் நடக்க இருக்கிறது. திலன் என்பவரைத் திருமணம் செய்யப் போகிறார் தியா. கடந்த ஆண்டு திருமண நிச்சயதார்த்தம் வெளிநாட்டில் நடந்த நிலையில், விரைவில் திருமணம் நடக்க இருக்கிறது. இதற்காக நடிகர் விஜயகுமார் மகள்கள் அனிதா, கவிதா, மருமகள் ஆர்த்தி, பேரன் கோகுலுடன் திரைப்பட முன்னணியினருக்கு நேரில் அழைப்பு விடுத்து வருகிறார். முதல் அழைப்பாக தனது நண்பரும், சக நடிகருமான ரஜினியை அவரது வீட்டில் சந்தித்து அழைப்பு விடுத்துள்ளார்.