நடிகை கடத்தல் வழக்கு : மெமரி கார்டு விசாரணையில் இருந்து விலகிய நீதிபதி | சுகன்யாவுக்கு 30 வருடம் கழித்து நீதிமன்றத்தில் கிடைத்த ஆறுதல் தீர்ப்பு | செவிலியர்களின் உடையில் மாற்றம் வேண்டும் : கங்கனா ரணாவத் | வாகா எல்லையில் ஏஆர் ரஹ்மானின் இசை நிகழ்ச்சி | பின்னணி குரல் கொடுத்துவிட்டு கண்கலங்கிய எம்.எஸ்.பாஸ்கர் | 3 பட வெற்றி விழாவுக்காக தயாராகும் படக்குழுவினர் | வெற்றியை தேடி ஓடாதீங்க... திறமையை மேம்படுத்துங்க : மனோஜ் பாஜ்பாய் | ‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் |

'அட்டக்கத்தி' படத்தின் மூலம் அறிமுகமானவர் நந்திதா ஸ்வேதா. அதன்பிறகு எதிர்நீச்சல், இதற்குதானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா, நளனும் நந்தினியும், முண்டாசுபட்டி, புலி, உள் குத்து, கலகலப்பு உள்பட பல படங்களில் நடித்தார். தற்போது 'ரணம்' என்ற தமிழ் படத்திலும், 'ரா ரா பெனிமிட்டி' என்ற தெலுங்கு படத்திலும் நடித்து வருகிறார்.
சமீபத்தில் 'பைப்ரோமியால்ஜியா' என்ற தசை கோளாறால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது என் உடல் எடையை கடுமையாக குறைத்துள்ளது என்றும், ஒரு சிறிய வேலை செய்தால் கூட என்னுடைய தசைகளில் இது பிரச்னையை ஏற்படுத்தும். இதனால், அதிக கடினமான வேலைகளையும் உடற்பயிற்சியும் என்னால் செய்ய முடியாது. இத்தனை வலிகளை மீறி படத்திற்காக வேலை செய்கிறேன் என்றும் கூறியிருந்தார். இதற்கான சிகிச்சையும் பெற்று வந்தார்.
இந்த நிலையில் நந்திதா திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். தரிசனத்திற்கு பிறகு தன்னை சந்தித்த செய்தியாளர்களிடம் “நல்லபடியாக சாமி தரிசனத்தை முடித்து விட்டேன். 2024ம் வருடம் தொடங்கி இருக்கிறது. மேலும் ஆந்திராவில் சர்வதேச திரைப்பட விழா நடந்து கொண்டிருக்கிறது. இதற்காக, இப்போது நான் வந்தேன். தமிழ், தெலுங்கு என இரண்டிலும் நல்ல படங்களில் நடித்து வருகிறேன். மேலும் இரண்டு படங்களில் ஒப்பந்தமாகி இருகிக்றேன்” என்றார்.