அஜித் 64வது படம் தாமதமாகிறது...? | முதல் குழந்தை வீட்டிற்கு வருவதற்கு முன் ஆறு குழந்தைகளை பறிகொடுத்தேன் : சன்னி லியோன் | மோகன்லால் படத்தை விட கல்யாணியின் படம் காட்சிகள் அதிகரிப்பு | நடிகை ரம்யா மீது அவதூறு தாக்குதல் : இதுவரை நடிகர் தர்ஷினின் 12 ரசிகர்கள் கைது | மலையாள திரையுலகை பிடித்து ஆட்டும் கேமியோ ஜுரம் | முதலில் ‛பியார் பிரேமா காதல்' இப்போது ‛பியார் பிரேமா கல்யாணம்' | ஜெயிலர் 2 படத்தில் சர்ப்ரைஸ் ஆக என்ட்ரி தரும் வித்யாபாலன் | மீசைய முறுக்கு 2ம் பாகம் படப்பிடிப்பு துவங்கியது | வராது... ஆனா வரும்! பாஸ்கியுடன் ஒரு 'கலகல' | இரண்டே முக்கால் மணி நேரம் ஓடும் 'மதராஸி' |
'வெண்ணிலா கபடி குழு' படத்தின் மூலம் பிரபலமானவர் அப்புகுட்டி. சிறு சிறு வேடங்களிலும் காமெடி கேரக்டர்களிலும் நடித்து வந்த அப்பு குட்டி 'அழகர்சாமியின் குதிரை' படத்தில் கதையின் நாயகனாக நடித்து, தேசிய விருது பெற்றார். அதைத்தொடர்ந்து கதையின் நாயகனாக சில படங்களில் நடித்து வருகிறார். அதில் 'வாழ்க விவசாயி', 'பிறந்தநாள் வாழ்த்துகள்' இரண்டு படங்களும் விரைவில் வெளிவர உள்ளது.
பால் டிப்போ கதிரேசன் தயாரிப்பில், பொன்னி மோகன் இயக்கியுள்ள படம் 'வாழ்க விவசாயி'. இந்த படத்தில் விவசாயியாக அப்புகுட்டி நடித்துள்ளார். இதில் அப்புக்குட்டி ஜோடியாக வசுந்தரா நடித்துள்ளார்.
இது குறித்து அப்புகுட்டி கூறியதாவது : நான் எப்போதும் கதை நாயகன் தான், கதாநாயகன் அல்ல. எனக்கு பொருத்தமான கதைகளோடு இயக்குனர்கள் வருகிறார்கள். எனக்கு பொருந்தாத கேரக்டர்களாக இருந்தால் நானே மறுத்து விடுகிறேன். கதை நாயகனாக நடித்தாலும் தொடர்ந்து காமெடி வேடங்களிலும் நடிப்பேன். விஜய், அஜித் போன்ற முன்னணி நடிகர்களுடன் நடிக்கும் ஆர்வத்தில் இருக்கிறேன். என்கிறார்.