அடுத்தடுத்து மேனேஜர்களை நீக்கிய விஷால், ரவிமோகன் | 100 மில்லியன் கடந்த சிரஞ்சீவி, நயன்தாரா பாடல் | போர்ச்சுக்கல் நாட்டிற்கு ஹனிமூன் சென்ற சமந்தா- ராஜ் நிடிமொரு! | காத்திருங்கள்: அஜித்தின் 'மங்காத்தா' விரைவில் ரீ ரிலீஸ்! | தனுஷ் 54வது படத்தின் டைட்டில் போஸ்டர் எப்போது? | கதையின் நாயகியாக மாறிய தனுஷ் பட நடிகை! | ரியோ ராஜின் 'ராம் இன் லீலா' முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு! | நானி படத்தில் இணையும் பிரித்விராஜ்! | மீண்டும் ஒரு தெலுங்கு படத்தை ஒப்பந்தம் செய்த துல்கர் சல்மான்! | எனது பழைய போட்டோக்களை பகிராதீர்கள்: மும்தாஜ் வேண்டுகோள் |

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ் தனது 51வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை தற்காலிகமாக DNS என அழைக்கின்றனர். இதில் கதாநாயகியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கின்றார் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நாகார்ஜூனா நடிக்கின்றார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ் மற்றும் அமிகோஸ் கிரியேஷன்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றனர். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கின்றார்.
இதன் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக ஆந்திராவில் நடைபெற்று வருகிறது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் உருவாகிறது. இந்த நிலையில் சமூக வலைதளங்களில் இப்படத்திற்கு 'தாராவி' என தலைப்பு வைத்ததாக தகவல் பரவி வந்தது. இப்போது கிடைத்த தகவலின் படி, இதுவரை இந்த படத்திற்கு எந்த தலைப்பும் வைக்கவில்லை என படக்குழு வட்டாரத்தில் தெரிவிக்கின்றனர்.
இதனிடையே நேற்று இந்த படத்தின் படப்பிடிப்பு திருப்பதியில் நடந்தது. அப்போது போக்குவரத்திற்கு இடையூறு ஏற்பட்டதாக சர்ச்சைகள் எழுந்தன. இந்நிலையில் இன்று திருப்பதி சென்று ஏழுமலையானை தரிசனம் செய்துள்ளார் நடிகர் தனுஷ்.