நாளை 'வேட்டையன்' விழா : கதை சொல்வாரா ரஜினிகாந்த் ? | விஜய்யின் இரண்டாவது 400 கோடி படம் 'தி கோட்' | சிவகார்த்திகேயனை தவிப்பில் விட்ட ஏஆர் முருகதாஸ் | அஜித்துடன் நடந்த 10 நொடி சந்திப்பு : கவின் | விஜய்க்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் | நாளை வெளியாகும் வேட்டையன் படத்தின் இரண்டாம் பாடல் | இந்த கண்டிஷன் ஓகே என்றால் சினிமாவில் நடிப்பேன் - ஜோவிதா பளீச் பேட்டி | வாழ்க்கையிலேயே செய்த பெரிய தவறு பிக்பாஸ் - சக்தி | நவ., 14ல் வர்றோம்... : வந்தாச்சு சூர்யாவின் ‛கங்குவா' புதிய ரிலீஸ் அறிவிப்பு | பதம் பார்த்தது பாலியல் புகார் : ‛ரஞ்சிதமே' பாடல் புகழ் நடன இயக்குனர் ஜானி கைது |
இசையமைப்பாளர் இளையராஜாவின் மகள் பவதாரிணி இரண்டு தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் மரணம் அடைந்தார். அவரது இறுதிச் சடங்கு இன்று இளையராஜாவின் சொந்த ஊரான பண்ணைபுரம் அடுத்த லோயர்கேம்ப் பகுதியில் அமைந்துள்ள அவர்களது தோட்டத்தில் நடைபெற உள்ளது.
இளையராஜாவின் அண்ணன், தம்பி குடும்பத்தில் பவதாரிணி மற்றும் மறைந்த அண்ணன் ஆர்டி பாஸ்கர் மகள் வாசுகி பாஸ்கர் ஆகிய இருவர் மட்டுமே பெண் வாரிசுகள். தனது ஒரே சகோதரியைப் பறி கொடுத்த வாசுகி பாஸ்கர் நேற்று அழுத போது அவரை வெங்கட் பிரபு ஆறுதல் அளித்து அழைத்துக் கொண்ட காட்சியைப் பார்த்த பலருக்கும் பெரும் சோகமாக இருந்தது.
திரையுலகில் பிரபல ஆடை வடிவமைப்பாளராகப் பணியாற்றி வரும் வாசுகி பாஸ்கர், பவதாரிணி குறித்த இரங்கலைப் பதிவு செய்துள்ளார். அதில், “என்னுடைய மறுபாதி நீ, அதையும் என்னிடமிருந்து எடுத்துச் சென்றுவிட்டாய். மற்றொரு பக்கத்தில் உன்னை பார்க்கிறேன். எனது ஒரே ஒரு சகோதரி. உன்னை நாங்கள் அனைவரும் மிகவும் மிஸ் செய்வோம். லவ் யு பவதா,” என உருக்கமாகப் பதிவிட்டுள்ளார்.