எதிர்பார்த்ததை விட பாசிட்டிவான விமர்சனங்கள் - விக்ரம் வெளியிட்ட வீடியோ! | பரபரப்பில்லாமல் இன்றைய வெளியீடுகள் | ஆறு மாதங்கள் தள்ளிப் போனது 'இட்லி கடை' | கார் பார்க்கிங் பிரச்னை : பிக்பாஸ் பிரபலம் தர்ஷன் கைது | இந்தியன் 3 படத்தின் பணிகள் மீண்டும் துவங்கியது | இறுதி கட்டத்தில் 'லவ் மேரேஜ்' | பிளாஷ்பேக் : இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்ட முதல் தமிழ்படம் | பிளாஷ்பேக் : லலிதா, பத்மினிக்காக காத்திருந்த ரசிகர்கள் | ஆஸ்கர் விருது வரை சென்ற 'லபாட்டா லேடீஸ்' படம் கதை காப்பி சர்ச்சையில் சிக்கியது | சினிமா ஆனது இந்தியாவின் முதல் மகாத்மாவின் வாழ்க்கை |
லவ் டூடே படத்தில் நடித்து வெற்றி பெற்ற பிறகு இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் அடுத்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்கிறார். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் லலித் தயாரிக்கும் இந்த படத்திற்கு எல்.ஜ.சி(லவ் இன்சூரன்ஸ் கார்பரேஷன்) என தலைப்பு வைத்துள்ளனர். இதில் பிரதீப் ரங்கநாதன் உடன் முக்கிய கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். கதாநாயகியாக கிர்த்தி ஷெட்டி நடிக்கிறார். ஏற்கனவே இந்த படத்தை பூஜையுடன் தொடங்கி கடந்த சில மாதங்களாக இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தின் படப்பிடிப்பு கோவையில் உள்ள ஈஷா மையத்தில் ஆசிர்வாதத்துடன் தொடங்கியதாக கூறப்படுகிறது.