அல்லு அர்ஜுன் தம்பி அல்லு சிரிஷ் நிச்சயதார்த்தம் | இயக்குனர் வி.சேகர் மருத்துவமனையில் அட்மிட் : மகன் உருக்கமான வேண்டுகோள் | ஜெயிலர் 2 : சிறப்புத் தோற்றத்தில் பகத் பாசில் | 'அருவி' படமே 'அஸ்மா' எகிப்து படத்தின் காப்பி தான்…. | பாகுபலி தி எபிக் - 'டயர்ட்' ஆகும் ரசிகர்கள் | வீராங்கனைகளை உற்சாகப்படுத்த கிரிக்கெட் ஆன்தம் பாடிய ஆன்ட்ரியா | பிளாஷ்பேக் : பாட்டுக்காக எழுதப்பட்ட கதை | பிளாஷ்பேக்: கடும் எதிர்ப்பை சம்பாதித்த 'சொர்க்கவாசல்' | ஆண்களை கேள்வி கேட்கும் படம் | தயாரிப்பு நிறுவனம் தொடங்கினார் ஆரவ் |

சின்னத்திரை நடிகையான காயத்ரி யுவராஜ், சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் நேயர்களிடத்தில் பிரபலமானார். சின்னத்திரையில் அரண்மனைக்கிளி, பொன்னூஞ்சல், அழகி என பல ஹிட் தொடர்களில் நடித்துள்ளார். காயத்ரிக்கு நடன இயக்குநர் யுவராஜுடன் திருமணமாகி 12 வயதில் ஒரு மகன் இருக்கிறார். தற்போது 12 வருடங்களுக்கு பிறகு தனது இரண்டாவது குழந்தையை கடந்த நவம்பர் மாதத்தில் பெற்றெடுத்தார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் காயத்ரியிடம் ரசிகர்கள் பலரும் மகளின் புகைப்படத்தை பதிவிட சொல்லி கேட்டு வந்தனர். இந்நிலையில், காயத்ரி தற்போது தனது மகளின் போட்டோஷூட் புகைப்படங்களை வரிசையாக வெளியிட்டு வருகிறார். அந்த புகைப்படங்களின் குழந்தையின் அழகை காணும் ரசிகர்கள் க்யூட் என கொஞ்சி வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.