பிளாஷ்பேக் : ரீமேக்கில் தோல்வியடைந்த முதல் படம் | திடீர் நடிகையான தயாரிப்பாளர் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ஸ்மிருதி வெங்கட் படம் | சர்வதேச திரைப்பட விழாவில் விருது வென்ற தமிழ் படம் | ‛டியூட்'-ல் இடம் பெற்ற ‛கருத்த மச்சானை' நீக்க நீதிமன்றம் உத்தரவு | புயல் மிரட்டும் வேளையிலும் இந்த வாரம் 12 படங்கள் ரிலீஸ் | சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் |

சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெயலெட்சுமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறை சார்ந்த பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், 'சமுதாயத்தில் நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் இருக்கிறது. ஒருமுறை வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி என்று எனக்கு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசுகையில் இரண்டு பெண்களின் படத்தை காட்டி பேரம் பேசினார்கள். ஆபாசமாக போட்டோ அனுப்பினால் 2 லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்கிற தவறான எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.




