Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

ரத்னம் படத்தில் ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சி! விஷால் வெளியிட்ட வீடியோ

14 ஜன, 2024 - 05:45 IST
எழுத்தின் அளவு:
Five-minutes-of-fight-scene-in-one-shot-in-Ratnam!-Video-posted-by-Vishal

ஹரி இயக்கத்தில் விஷால் நடித்து வரும் படம் ரத்னம். இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியானது. இந்த நிலையில் நடிகர் விஷால் சமூக வலைத்தளத்தில் ஒரு வீடியோ வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில், விஷாலை வரவேற்கும் இயக்குனர் ஹரி, ஸ்டண்ட் மாஸ்டர் உங்களை பார்க்க வேண்டும் என்று விரும்புகிறார். என்ன என்று போய் கேளுங்கள் என சொல்லி அனுப்புகிறார்.

இதையடுத்து விஷால் பைட் மாஸ்டர் கனல் கண்ணனை போய் பார்க்கும் போது, ஒரே ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியை எடுக்க போகிறோம் என்று கூறுகிறார். அதற்கு ஒரு ஷாட்டில் ஐந்து நிமிடம் சண்டைக் காட்சியா? என்று அவர் கேட்கும்போது, சண்டை காட்சி மட்டும் அல்ல சேஸிங் காட்சியும் உண்டு என்று கூறுகிறார். அதைக்கேட்டு ஆச்சர்யத்துடன் செல்கிறார் விஷால். அப்போது கனல்கண்ணன் 24 வருஷமா எவ்வளவு அடிச்சாலும் தாங்குறானே என்று கூறிக் கொண்டு நிற்கிறார். இப்படி இந்த ரத்னம் படத்தில் ஒரு காட்சி இடம் பெறுவதை இந்த வீடியோ மூலம் தெரிவித்திருக்கிறார் விஷால். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்க சமுத்திரக்கனி, யோகி பாபு, கவுதம் மேனன் உள்ளிட்ட பலரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள்.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
‛லவ்வர்' பட ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்‛லவ்வர்' பட ரிலீஸ் தேதியில் ஏற்பட்ட ... ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் இயக்குனர் ஆகிறார்! ஒளிப்பதிவாளர் ஜீவாவின் மகள் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)