'லோகா 2' படப்பிடிப்பு எப்போது? அப்டேட் கொடுத்த கல்யாணி பிரியதர்ஷன் | ஏ.ஐ., படிக்கிறாரா சிம்பு? | மை லார்ட் வெற்றி படமா... சசிகுமார் பேசியது என்ன? | இன்ஸ்டா பாலோயர்கள் வைத்து தான் சம்பளமா... : ஷா ரா புலம்பல் | சூர்யாவை இயக்கும் அஸ்வத் மாரிமுத்து? | படப்பிடிப்புக்கு முன்பே ஒரு மில்லியன் ரீல்களை எட்டிய 'ஏஏ23' தீம் | பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய நித்யா மேனன்! | நண்பர்களுடன் பிறந்த நாளை சிறப்பாக கொண்டாடி மகிழ்ந்த சிவகார்த்திகேயன்! | சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மஹத் ராகவேந்திரா | துருவ் விக்ரம் அடுத்த படத்தை குறித்து புதிய தகவல் இதோ |

'குட் நைட்' படத்தின் வெற்றிக்குப் பிறகு நடிகர் மணிகண்டன் 'லவ்வர்' என்கிற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இதனை அறிமுக இயக்குனர் பிரபு ராம் இயக்குகிறார். இதில் கவுரி ப்ரியா ரெட்டி, கண்ணா ரவி, சரவணன், கீதா கைலாசம், ஹரிஷ் குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மில்லியன் டாலர் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சான் ரோல்டன் இசையமைக்கிறார். கடந்த சில மாதங்களாக இதன் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.
ஏற்கனவே இதன் டீசர் உடன் இப்படம் 2024 பிப்ரவரி 14ம் தேதி காதலர் தினத்தை முன்னிட்டு திரைக்கு வருகிறது என அறிவித்ததைத் தொடர்ந்து இப்போது திடீரென லவ்வர் படம் சற்று முன்பே பிப்ரவரி 9ம் தேதி அன்று திரைக்கு வரும் என படக்குழு அறிவித்துள்ளனர்.




