அடுத்த படத்திற்காக கதை கேட்கும் பவிஷ் | வாடிவாசல் படப்பிடிப்பில் ஏற்பட்ட திடீர் மாற்றம் | அல்லு அர்ஜுன், அட்லி படம் : கதாநாயகிகள் வாய்ப்பு யாருக்கு? | ஒரு பாட்டாவது வைத்திருக்கலாம்…. த்ரிஷா, சிம்ரன் ரசிகர்கள் வருத்தம் | 2025ல் இரண்டாவது 50 நாள் படம் 'டிராகன்' | அஜித்தை மீண்டும் இயக்கும் ஆதிக் ரவிச்சந்திரன் | 'வா வாத்தியார்' : இப்போது வர மாட்டார் ? | ‛குட் பேட் அக்லி' : விமர்சனங்களை மீறி முதல் நாள் வசூல் | 'ரெய்டு-2' படத்தில் தமன்னாவின் 'நாஷா' கிளாமர் பாடல் வெளியீடு! | சோசியல் மீடியாவில் விமர்சித்த ரசிகர்களுக்கு திரிஷா கொடுத்த கமெண்ட்! |
பெங்களூரு: கர்நாடகாவில் நடிகர் யஷுக்கு கட் அவுட் வைக்க போய் மூன்று ரசிகர்கள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளனர்.
கேஜிஎப் படத்தின் மூலம் இந்தியா முழுவதும் பிரபலமானவர் நடிகர் யஷ். கர்நாடகாவில் ராக்கிங் ஸ்டார் என்று அழைக்கப்படும் யஷுக்கு இன்று(ஜன.,08) பிறந்தநாள். இதனால் கடக் மாவட்டத்தில் அவரது ரசிகர்கள் ஹனமந்த ஹரிஜன்(வயது21), முரளி(வயது 20), நவீன் காஜி(வயது19) உள்பட 10 பேர் கட் அவுட் வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட் அவுட் மின்சார வயரில் பட்டது. இதில் மின்சாரம் பாய்ந்து ஹனமந்த ஹரிஜன், முரளி, நவீன் காஜி ஆகிய 3 ரசிகர்கள் உயிரிழந்தனர். மேலும், 7 பேர் லேசான காயத்துடன் உயிர் தப்பினர். இந்த சம்பவம் கர்நாடகா மாநிலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.