நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் படப்பிடிப்பு நிறைவு பெற்றது | துப்பாக்கிய பிடிங்க : விஜய்யின் பெருந்தன்மை - சிவகார்த்திகேயன் நெகிழ்ச்சி | விஷ்ணு விஷால் படத்தில் நிகழ்ந்த மாற்றம் | புஷ்பா 2 டிரைலர் - தெலுங்கை விட ஹிந்திக்கு அதிக வரவேற்பு | அட்லியின் அடுத்த படம் : வெளியானது புதிய அப்டேட் | அஜித்தின் குட் பேட் அக்லி படப்பிடிப்பு விரைவில் முடிவடைகிறது | சூர்யாவின் கர்ணா ஹிந்தி படம் டிராப்பா? | டில்லியில் சிறிய அளவில் பிறந்தநாள் கொண்டாடிய நயன்தாரா | 2024ல் அதிகம் பேர் பார்த்த படமாக 'அமரன்' | வாரணாசி கோவிலுக்கு சென்று வழிபட்ட ஸ்ரீலீலா |
2024 பொங்கலை முன்னிட்டு தமிழில், “கேப்டன் மில்லர், அயலான், மிஷன் சாப்டர் 1' ஆகிய படங்கள் வெளியாக உள்ளன. இவற்றில் 'கேப்டன் மில்லர், அயலான்' படங்களை தெலுங்கிலும் டப்பிங் செய்து பொங்கலுக்கு ஆந்திரா, தெலங்கானாவிலும் வெளியிட திட்டமிட்டிருந்தார்கள். ஆனால், தற்போது இரண்டு படங்களும் அங்கு வெளியாகவில்லை என்பது உறுதியாகி உள்ளது.
'கேப்டன் மில்லர்' படத்தின் தெலுங்கு டிரைலரை இன்னும் வெளியிடவேயில்லை. ஆனால், 'அயலான்' படத்தின் தெலுங்கு டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையிலும், அதை பிரபல தெலுங்கு தயாரிப்பாளரான தில் ராஜு நிஜாம், உத்தராந்திரா ஏரியாக்களில் வெளியிடும் உரிமையை வாங்கியிருந்தார். தெலுங்குப் படங்களுக்கான முக்கியமான வசூல் ஏரியாக்கள் அவை.
பொங்கலுக்கு வெளியாக உள்ள தெலுங்குப் படங்களில் “குண்டூர் காரம், ஹனு மான், சைந்தவ், நா சாமி ரங்கா” ஆகிய படங்களில் 'ஹனு மான்' படத்தின் வெளியீட்டு உரிமை எதையும் தில் ராஜு வாங்கவில்லை. அதே சமயம் தமிழிலிருந்து தெலுங்கில் டப்பிங் ஆகும் 'அயலான்' படத்தின் உரிமையை வாங்கியிருந்தார். அதனால், நேரடி தெலுங்குப் படமான 'ஹனு மான்' படத்திற்கு சரியான தியேட்டர்கள் கிடைப்பதை தில் ராஜு தடுக்கலாம் என ஒரு சர்ச்சை எழுந்தது.
உண்மை என்னவென்றால் ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் மகேஷ்பாபு நடித்துள்ள குண்டூர் காரம் படத்திற்கு தான் தியேட்டர்காரர்கள் முக்கியவத்துவம் தருகிறார்கள்.
நேற்று 'ஹனு மான்' படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சீனியர் நடிகரான சிரஞ்சீவி, தில் ராஜு குறித்தும் பேசியதால் பரபரப்பானது.
2017 பொங்கலை முன்னிட்டு தெலுங்கில் சிரஞ்சீவி நடித்த 'கைதி எண் 150', பாலகிருஷ்ணா நடித்த 'கௌதமிபுத்த சட்டகர்னி' படங்கள் வெளியான போது தில் ராஜு அவர் தயாரித்த 'ஷதாமனம் பவதி' படத்தையும் வெளியிட்டார். பெரிய நடிகர்களின் படங்களுக்கு மத்தியில் ஏன் சிறிய படங்களை வெளியிடுகிறீர்கள் எனக் கேட்டதற்கு படத்தின் கதை நன்றாக இருந்தால் ஓடிவிடும் என தில் ராஜு பதிலளித்ததைப் பற்றிக் சிரஞ்சீவி குறிப்பிட்டு பேசினார். ஆனால் சிரஞ்சீவி பேசியதை திரித்து சிலர் செய்தி வெளியிட்டனர்.
அதனால் சிரஞ்சீவி 'ஹனு மான்' படத்திற்கு ஆதரவாகவும், தில் ராஜுவுக்கு எதிராகவும் பேசிவிட்டார் என தெலுங்கு ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்ய ஆரம்பித்தனர். இது குறித்து தில் ராஜு பேசுகையில், 'அயலான்' படத்தை பொங்கலுக்கு வெளியிடவில்லை. ஹனு மான் படத்தை நான் தடுக்கவில்லை. எனக்கு உளைச்சலாக உள்ளது, என்னை எதற்கு டார்கெட் செய்கிறார்கள். சீனியர் நடிகர்களான வெங்கடேஷ், நாகார்ஜூனா படங்களுக்கு கூட போதிய தியேட்டர்கள் கிடைக்கவில்லை” எனப் பேசியுள்ளார்.
தமிழிலிருந்து தெலுங்கில் வெளியாக முடியாத சூழலில் 'அயலான், கேப்டன் மில்லர்' படங்கள் இருக்க, தெலுங்கிலிருந்து தமிழில் அதே 'ஹனு மான்' படம் எந்த பிரச்சனையும் இல்லாமல் இங்கு வெளியாக உள்ளது. இங்கு அப்பட வெளியீட்டை தமிழ்த் திரையுலகினர் யாரும் எதிர்க்கவில்லை. மேலும், ஹிந்தி டப்பிங் படமான 'மெர்ரி கிறிஸ்துமஸ்' படம் கூட இங்கு வெளியாகிறது.
சமீப காலங்களில் தமிழிலிருந்து டப்பிங் ஆகி வரும் படங்களின் வெளியீட்டை தெலுங்குத் திரையுலகினரும், ரசிகர்களும் எதிர்க்க ஆரம்பித்துள்ளார்கள்.