ஹிந்தி படத்திற்காக டில்லி சென்ற தனுஷ் | கமல் படத்திற்கு முதன்முறையாக இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | ஜீனி படத்தின் புதிய அப்டேட் | சூர்யா பட மூலம் மீண்டும் தமிழுக்கு வரும் மலையாள நடிகர் | 2-வது திருமணம் செய்யும் நாக சைதன்யாவுக்கு நாகார்ஜுனா அளிக்கும் விலை உயர்ந்த பரிசு | நான் சினிமாவில் இருப்பதற்கு என் மனைவி தான் காரணம் - சிவகார்த்திகேயன் | விடாமுயற்சிக்கும், கேம் சேஞ்சருக்கும் இடையே போட்டியா ?- எஸ்.ஜே.சூர்யா | ஸ்ரீலீலாவை 'ஓவர் டேக்' செய்த ரஷ்மிகா மந்தனா | பிளாஷ்பேக் : மலையாள சினிமாவின் தந்தையை விரட்டிய தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : நாடகத்தையும், சினிமாவையும் இணைத்த கோமல் சாமிநாதன் |
பிரசாந்த் நீல் இயக்கத்தில் யஷ் நடிக்க கன்னடத்தில் தயாரான 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்களும் தமிழ் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றன. அந்த இரண்டு படங்களும் தியேட்டர்களிலும், ஓடிடி தளங்களிலும், டிவியிலும் அதிகம் ரசிக்கப்பட்ட படங்கள். அந்தப் படத்தைப் பற்றி பலரும் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிடும் அளவிற்கு பரபரப்பை ஏற்படுத்தியவை.
பிரசாந்த் நீல் இயக்கத்தில் அடுத்து வெளிவந்த 'சலார்' படம் 'கேஜிஎப்' படத்தின் இரண்டு பாகங்கள் ஏற்படுத்திய பரபரப்பை சிறிது கூட ஏற்படுத்தவில்லை. தமிழ் ரசிகர்களிடம் அப்படம் எந்தவிதமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதுதான் உண்மை. 'கேஜிஎப்' சாயலிலேயே 'சலார்' படத்தை எடுத்திருந்தார் பிரசாந்த் நீல் என்பதுதான் பலரது விமர்சனங்களில் காணப்பட்டது.
தமிழகத்தில் மட்டுமல்லாது, கேரளா, கர்நாடகாவிலும் இப்படம் வியாபார ரீதியாக பெரிய வசூலைக் குவிக்க முடியாமல் போனது. தெலுங்கு மாநிலங்களில் மட்டும்தான் படத்திற்கு வரவேற்பும், வசூலும் கிடைத்தது.
'பாகுபலி 2' படத்திற்குப் பிறகு பிரபாஸ் நடித்து வெளிவந்த பான் இந்தியா படங்களான 'சாஹோ, ராதே ஷ்யாம், ஆதி புருஷ்,' ஆகிய படங்கள் தமிழில் வரவேற்பையோ, வசூலையோ பெறவில்லை. அந்த வரிசையில் 'சலார்' படமும் சேர்ந்துவிட்டது. அவரது நடிப்பில் அடுத்து வர உள்ள'கல்கி 2898 எடி' படமாவது அதை மாற்றுமா ?.