சூர்யாவின் ‛விஸ்வநாத் அண்ட் சன்ஸ்' டீசர் வெளியீடு | சிம்புவுக்கு ஜோடியாகும் மமிதா பைஜு | சென்னையில் நாளை ஜனநாயகன் மறு தணிக்கை நடக்கிறது | பவன் கல்யாணை பாராட்டும் ஸ்ரீலீலா | 'மாத்ருபூமி' ஆக மாறிய 'பேட்டில் ஆப் கல்வான்' | முன்பதிவில் 120 கோடி வசூல் கடந்த 'துரந்தர் 2' | கைவசம் பல படங்கள் : வெற்றிக்காக ஏங்கும் ஜெய் | அரசியலுக்கு வருவாரா திரிஷா? | அஜித் இயக்குனர்கள் ரெடி : ஆனா தயாரிப்பாளர் எங்கே | ஆயிரம் நடன கலைஞர்களுடன் உருவான பிரமாண்ட பக்தி பாடல் |

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழ் திரையுலகம் சார்பில் ‛கலைஞர் 100' என்ற பிரமாண்ட கலை நிகழ்ச்சி சென்னையில் உள்ள கிண்டி ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் மாலை 6 மணியளவில் துவங்கியது. இதில் திரளான திரைப்பிரபலங்கள் கலந்து கொண்டுள்ளனர்.
முதல்வர் முக ஸ்டாலின் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் அமைச்சர்கள் உதயநிதி, சாமிநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மேலும் திரையுலகை சேர்ந்த ரஜினிகாந்த், கமல்ஹாசன், சிவகுமார், சூர்யா, கார்த்தி, தனுஷ், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், அமீர், வெற்றிமாறன், ரோஜா, சிவராஜ்குமார், கருணாஸ், லைகா சுபாஸ்கரன், பார்த்திபன், வடிவேலு, சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, விஜய் ஆண்டனி, பி வாசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

மயிலாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம் போன்ற கலை நிகழ்ச்சிகளுடன் நிகழ்ச்சி துவங்கியது. வேல் முருகன், சின்ன பொண்ணு, எஸ்ஏ ராஜ்குமார் உள்ளிட்டோர் பாடல்கள் பாடினர். நடிகை லட்சுமி மேனன், தமிழ் பற்றிய பாடலுக்கு நடனம் ஆடினார். டிரம்ஸ் சிவமணி மற்றும் லிடியனின் இசை நிகழ்ச்சி நடந்தது.