2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

கருணாநியை அவரது வீட்டிலேயேசென்று சந்தித்தவர் சாய்பாபா என நடிகர் ரஜினி காந்த் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் ரஜினிகாந்த் பேசியதாவது: கருணாநிதியின் மந்திரகுமாரி படத்தில் கிடைத்த வருமானம் மூலம் தான் 1955-ல் கோபாலபுரம் வீடு வாங்கப்பட்டது. தன்னுடைய கடைசிகாலம் வரையில் வீட்டில் எந்த மாற்றமும் செய்யாமல் பழமையை போற்றி வாழ்ந்தார்.
சாய்பாபாவை சந்திக்க ஜனாதிபதியே காத்திருக்க வேண்டும்.ஆனால் சாய்பாபாவே கருணாநியை அவரது வீட்டிலேயே சென்று சந்தித்தார். கருணாநிதியிடம் எழுத்தாற்றல் மட்டுமல்லாதது பேச்சாற்றலும் இருந்தது. கருணாநிதியின் பேச்சில் தெனாலிராமனின் நையாண்டியும் சாணக்கியனின் தந்திரமும் இருந்தது. பாரதியின் கோபம் இருக்கும்.
கருணாநிதியின் காலத்தில் வாழ்ந்தோம் என்பதே மிகப்பெரிய விசயம். எழுத்தாளர் ஜெயகாந்தனின் மருத்துவ செலவை ஏற்றவர் கருணாநிதி கருணாநிதியின் எழுத்துக்களை படித்தால் கண்களில்தண்ணீர் வரும், சில எழுத்துக்களை படித்தால் கண்ணில் இருந்து நெருப்பு வரும். உஙகளுக்கு ஆண்டவனை பிடிக்காது ஆனால் ஆண்டவனுக்கு உங்களை பிடிக்கும் என நான் கருணாநிதியிடம் சொன்னேன். கருணாநிதி அரசியல் பக்கம் போகாமல் இருந்திருந்தால் இன்னும் பல சிவாஜி எம்.ஜி.ஆர்களை உருவாக்கி இருப்பார்.
மக்கள் சேவையுடன் தந்தையின் பெயரையும் முதல்வர் ஸ்டாலின் காப்பாற்ற வேண்டும். காப்பாற்றுவார் என்ற நம்பிக்கை உள்ளது. என ரஜினி கூறினார்.