செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
சிவாஜி எம்,ஜி.ஆர் ஆகிய இரு ஆளுமைகளை தன் வசனங்களால் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களாக மாற்றியவர் கருணாநிதி என நடிகர் கமலஹாசன் கூறினார்.
சென்னை கிண்டியில் உள்ள ரேஸ்கோர்ஸ் மைதானத்தில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் கருணாநிதியின் நூற்றாண்டு விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்டு நடிகர் கமலஹாசன் பேசியதாவது:
சினிமாவில் இருந்த போது அரசியலையும், அரசியலில் இருந்த போது சினிமாவையும் மறக்காமல் இருந்தவர் கருணாநிதி அவர் தன்னையும் வளர்த்தார், தமிழையும் வளர்த்தார், தமிழ்நாட்டையும் வளர்த்தார். கருணாநிதியின் பண்பு முதல்வர் ஸ்டாலினிடமும் உள்ளது.நெருங்கிய நண்பர் விஜயகாந்தின் இறுதிச்சடங்கை சிறப்பான முறையில் நடத்தி தந்த முதல்வர் ஸ்டாலினுக்கு சிரம் தாழ்ந்த நன்றிகள் . கருணாநிதி இருந்தாலும்இல்லாவிட்டாலும் அவர் எனக்கு சூட்டிய கலைஞானி என்ற பட்டம் என்னை தொடர்கிறது என்னைத் தொடரும்.
எனது தமிழ் ஆசான் எம்.ஜி.ஆர்
தமிழும் கருணாநிதியும், சினிமாவும் கருணாநிதியும், அரசியலும் கருணாநிதியும் பிரிக்க முடியாதவை.எனது தமிழ் ஆசான்கள் மூன்று பேர் . கருணாநிதி, நடிகர் திலகம் சிவாஜி, எம்.ஜி.ஆர். என பேசினார்.