சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா | ஜெயிலர் 2வில் மோகன்லால் இருக்கிறாரா? |
சமூக வலைத்தள மோதல்கள் நாளுக்கு நாள் அசிங்கமாகிக் கொண்டே போகிறது. கடந்த இரண்டு நாட்களாக ரஜினி ரசிகர்களுக்கும், விஜய் ரசிகர்களுக்குமான சண்டை மிகவும் மோசமாக இருக்கிறது.
வெங்கட் பிரபு இயக்கத்தில், விஜய் நடித்து வரும் 'த கோட்' படம் பற்றி ரஜினி ரசிகர் ஒருவர் 'காப்பி படமா இது' எனக் கேட்க அதற்கு வெங்கட் பிரபு பதிலடி கொடுத்திருந்தார். இந்நிலையில் நடிகை ரம்பா அளித்த ஒரு பேட்டியில் 'அருணாச்சலம்' படத்தில் நடித்த போது நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றிப் பேசியிருந்தார். “படப்பிடிப்பு தளத்திற்கு ஹிந்தி நடிகர் சல்மான் கான் வந்த போது அவரை தான் கட்டிப் பிடித்தது பற்றியும், அதை வைத்து ரஜினிகாந்த் கலாட்டா செய்தது பற்றியும் கூறியிருந்தார். அடுத்து படப்பிடிப்பு தளத்தில் திடீரென கரண்ட் ஆப் ஆன போது தன்னை யாரோ தோளில் தட்டிவிட்டுப் போனார்கள், நான் பயந்து போயிட்டேன். அப்புறம் பார்த்தால் அப்படி பண்ணது ரஜினி சார்,” என ஜாலியாகக் கூறியிருந்தார்.
'த கோட்' படத்திற்காக வெங்கட் பிரபு, ரஜினி ரசிகரை கிண்டலடித்திருந்ததால், பதிலுக்கு ரம்பாவின் இந்த பேட்டி விவகாரத்தை விஜய் ரசிகர்கள் கையில் எடுத்துக் கொண்டனர். “ரம்பாவிடம் அத்து மீறிய ரஜினி” என்ற ஹேஷ்டேக்கில் அதை ஒரு பாலியல் துன்புறுத்தல் போல சித்தரித்து பதிவுகளைப் போட ஆரம்பித்தனர். பதிலுக்கு ரஜினி ரசிகர்கள், “ஆம்பள ஷகிலா விஜய்” என ஆரம்ப காலங்களில் விஜய் நடித்த படங்களிலிருந்து பல ஆபாசமான காட்சிகளை எடுத்து பதிவிட்டனர்.
அந்த சண்டை நேற்றும் தொடர்ந்தது. வார்த்தைகளால் இங்கு குறிப்பிட முடியாத அருவருப்பான ஹேஷ்டேக்குளால் சண்டையத் தொடர்ந்து வருகிறார்கள். விஜய் ரசிகர்கள், அஜித் ரசிகர்களுக்கு இடையேதான் கடந்த சில வருடங்களாகவே சண்டைகள் நடப்பது வழக்கம்.
ஆனால், 'ஜெயிலர்' விழாவில் 'காக்கா கழுகு' கதையை ரஜினி சொன்ன பிறகு, 'லியோ படம் வெளியான பிறகு ரஜினி, விஜய் ரசிகர்கள் மோதல்தான், மிகவும் மோசமாகி வருகிறது. வழக்கம் போல சம்பந்தப்பட்ட இரண்டு நடிகர்களுமே இது பற்றி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.