படப்பிடிப்புக்கு முன்பே பின்னணி இசை : 'ஸ்பிரிட்'டில் புதிய முயற்சி | திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் |
கடந்த வருட துவக்கத்தில் பிக்பாஸ் புகழ் கவின் நடிப்பில் அறிமுக இயக்குனர் கணேஷ் பாபு இயக்கத்தில் வெளியான படம் டாடா. தந்தை மகன் பாசத்தை வைத்து ஒரு பீல் குட் படமாக உருவாகியிருந்த இந்த படத்திற்கு விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. அது மட்டுமல்ல நடிகர் கவினுக்கு அவரது திரையுலக பயணத்தில் ஒரு திருப்புமுனையாகவும் அமைந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் தெலுங்கில் நடிகர் நானி நடிப்பில் ஹாய் நானா என்கிற படம் வெளியானது. தந்தைக்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை மையப்படுத்தி உருவாகியிருந்த இந்த படமும் கிட்டத்தட்ட டாடா படத்தைப் போன்று இருப்பதாக பலரும் கூறினர்.
இதைக்கேட்ட நானி உடனடியாக டாடா படத்தை பார்த்துள்ளார். படத்தை பார்த்து ரொம்பவே ரசித்த நானி தனது நண்பர்கள் வட்டாரத்தில் இந்த படத்தை அனைவரும் பார்க்குமாறு சிபாரிசும் செய்துள்ளார். மேலும் சமீபத்திய புரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் இந்த படம் குறித்தும் கவின் நடிப்பு குறித்தும் பாராட்டியும் பேசியுள்ளார் நானி. இந்த வீடியோ சோசியல் மீடியாவில் வைரலானது.
இதைத் தொடர்ந்து நடிகர் கவின் கூறும்போது, “நான் மனப்பூர்வமாக யாருடைய நடிப்பை பார்த்து வியந்தேனோ அவராலேயே நான் கவனிக்கப்பட்டு இருக்கிறேன் என்பதை நினைக்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. ரொம்ப நன்றி நானி சார்” என்று கூறியுள்ளார்.