நயன்தாராவுடன் இணையும் படத்திற்காக போட்டோஷூட் நடத்திய சிரஞ்சீவி! | தனுஷின் 'குபேரா' படத்தை 50 கோடிக்கு கைப்பற்றிய அமேசான் பிரைம்! | நெட்பிளிக்ஸ் ஓடிடியில் வெளியாகும் சூர்யாவின் 'ரெட்ரோ' | 'கொம்பு சீவி' படத்திற்காக மதுரை வட்டார தமிழில் டப்பிங் பேசும் சண்முக பாண்டியன்! | விஜய்சேதுபதி நடித்துள்ள 'ஏஸ்' படத்தின் சென்சார் - ரன்னிங் டைம் வெளியானது! | ரவி மோகனிடம் மாதம் ரூ.40 லட்சம் ஜீவனாம்சம் கேட்கும் ஆர்த்தி ரவி | ரோல் மாடலுக்கு முத்தமிட்டு, மண்டியிட்டு மரியாதை செலுத்திய அஜித் | 'விக்ரம் 63' படத்தின் கதாநாயகி யார்? | வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க சூரி என்ன சொன்னார் தெரியுமா? | இசையமைப்பாளர் சாம் சிஎஸ் மீது மோசடி புகார் |
மாவீரன் படத்தை அடுத்து சிவகார்த்திகேயன் நடித்துள்ள அயலான் படம் பொங்கலுக்கு திரைக்கு வருகிறது. தற்போது ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் தனது 21வது படத்தில் அவர் நடித்து வருகிறார். இந்த நிலையில் தற்போது அவர் அயலான் படத்தின் புரமோசன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். அப்போது அளித்த ஒரு பேட்டியில், இயக்குனர் அட்லி குறித்த ஒரு கேள்விக்கு சிவகார்த்திகேயன் பதில் அளித்துள்ளார்.
அதில், ‛‛இயக்குனர் அட்லியை ஏற்கனவே வெளியான படங்களை காப்பியடித்து படம் இயக்குவதாக பலரும் விமர்சிக்கிறார்கள். ஆனால் அவரை மற்ற மொழிகளில் கொண்டாடுகிறார்கள். ஒரு தமிழ் இயக்குனர் பாலிவுட் சென்று ஷாரூக்கானை வைத்து படம் எடுத்து 1200 கோடி வியாபாரம் செய்வது விளையாட்டு அல்ல. அவர் இயக்கும் கதைகள் ஏற்கனவே வந்துள்ளது என்ற விமர்சனம் ஒரு பக்கம் இருந்தாலும், பாலிவுட்டில் தொடாத ஒன்றை இங்கிருந்து ஒருத்தர் போய் பண்ணிருக்கிறார் என்கிற போது அதை நாமெல்லாம் கொண்டாட வேண்டும்.
அட்லி இயக்கும் படங்கள் பொழுதுபோக்காக இருப்பதாக ரசிகர்கள் கூறுகிறார்கள். இன்னொரு பக்கம் சிலர் அவரை விமர்சிக்கிறார்கள். இப்போது அட்லி இங்கிருந்து பாலிவுட் போய்விட்டார். இதன் காரணமாக நமக்கான கமர்சியல் இயக்குனர் இல்லை. விஜய்யும், அட்லியும் இணைந்த படங்களின் வியாபாரமே வேற லெவலில் இருந்தது. தற்போது அது மிஸ் ஆகிறது என்று சிவகார்த்திகேயன் அந்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.